Latest News

November 21, 2015

மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினருக்கு.... ஒரு அன்பான, அவசர வேண்டுகோள்..!
by அகலினியன் - 0

மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் தோழர்களுக்கு....
ஒரு அன்பான, அவசர வேண்டுகோள்..!

மாவீரர் தினத்தில்... 
தாய் மண்ணின் விடிவிற்காகப் போராடிய மாவீரர்களை நெஞ்சினில் சுமந்து வீரவணக்கம் செலுத்தி நினைவு கொள்வதையும், மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்படுவதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில், தாய்த் தமிழகமும் தமிழீழ விடுதலைக்காக தனது புதல்வர்களையும் ஈன்று கொடுத்து தனது பங்களிப்பையும் சிறப்பாகவே நிறைவேற்றியுள்ளது. 

தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும்... 

தமிழக உறவுகள் அனைவரும் நெஞ்சினில் சுமந்து நினைவு கொண்டு வீரவணக்கத்தோடு கௌரவிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இனமான உணர்வுள்ள தமிழனதும் மிகுந்த எதிர்பார்ப்பாகும்...

அந்த வகையில், தாய்த் தமிழகம் வீரத்தோடு ஈன்று அனுப்பிய ஒரு சில மாவீரர்களில் பூநகரி "தவளைப் பாய்ச்சல்" இராணுவ நடவடிக்கையின் போது வீர காவியமான கரும்புலி "லெப்டினன்ட் செங்கண்ணன்" அவர்களும் அடங்குவார். அந்த உன்னதமான வீரம் நிறைந்த மாவீரனுக்கு தமிழகத்தில் இதுவரை எந்த நிகழ்வுமே நடந்ததில்லை.!! அத்தோடு எந்தவொரு அடையாளங்களும் பதிக்கப்படவில்லை என்பதே மிகவும் வேதனையான விடயமாகும்!!!

எதுவுமே செய்யாத, சாதிக்காத தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளை... அவர்கள் இறந்த பிற்பாடு ஒவ்வொரு வருடமும் தலையில் தூக்கி வைத்து கௌரவித்து... தெருவெங்கும் அவர்களுக்கு சிலைகள் வைத்து கொண்டாடும் போலித் தொண்டர்களை விட...

"நாம் தமிழர்" தொண்டர்கள் இனமானமுள்ளவர்கள் என்பதை ஈழத்தமிழருடன் உலகத் தமிழரும் நன்கு அறிவார்கள்.

ஆகவே, இந்த வருட மாவீரர் நாளில் தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் நினைவு கூர்ந்து, அவர்களது வீரப் பெற்றோர்களையும் இனம் கண்டு கௌரவித்து அவர்களுக்கான வீரம் செறிந்த நிகழ்வுகளை அவர்களுக்குரிய தகுந்த இடத்தில் நடாத்தி சிறப்பிக்குமாறு ஈழத்தமிழர் சார்பாக மிகவும் அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.

மாவீரர் கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன் அவர்களின் இயற்பெயரும் முகவரியும்...

தனுஸ்கோடி செந்தூரபாண்டியன்,
சாத்தூர்,
சிவகாசி,
தமிழ்நாடு,
இந்தியா.

மேற்கண்ட முகவரியில்... தேடிச் சென்று செங்கண்ணன் அவர்களது பெற்றோரை இனம் கண்டு மற்றும் அவர்களது உறவினர்களையும் அழைத்து இந்த வருட மாவீரர் நாளை "நாம் தமிழர்" உறவுகள் மிகவும் சிறப்பாக தாய்த் தமிழகத்தில் நடாத்த வேண்டும் என்பதே இனமானமுள்ள அனைத்து தமிழரின் விருப்பமாகும்.

வீரத் தமிழ்மகன் செங்கண்ணன் பிறந்த மண்ணில் செங்கண்ணனுக்கு ஒரு துரும்பும் இல்லையா??? அந்தப் வீரப் புதல்வனுக்கு தாய் மண்ணில் எந்தவொரு உரிமையும் இல்லையா???

செங்கண்ணனை வணங்கி அவனது மண்ணில் ஒரு அடையாளத்தை விதைத்து நாம் தமிழராக எழுவோம்!!!! 

« PREV
NEXT »

No comments