Latest News

November 20, 2015

2016 யூரோ கால்பந்தாட்ட போட்டிகள்: பங்கேற்கும் அணிகள் விபரம்!
by Unknown - 0

பிரான்சில் 2016ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி முதல் ஜூலை 10ம் திகதி வரை ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

24 அணிகள் மட்டுமே விளையாடும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள், கடந்த செப்டம்பர் 7ம் திகதி தொடங்கியது.

இதில் இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் உட்பட 53 அணிகள் கலந்து கொண்டன.

ஏற்கனவே 20 அணிகள் தெரிவான நிலையில் கடைசி நான்கு இடங்களுக்கான  பிளேஆப் சுற்றுகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் டென்மார்க்கை வீழ்த்திய ஸ்வீடனும், ஸ்லோவேனியாவை வீழ்த்திய உக்ரைனும் தகுதி பெற்றன.

மேலும் நார்வேயை தோற்கடித்து ஹங்கேரியும், போஸ்னியாவை தோற்கடித்து அயர்லாந்தும் தகுதி பெற்றன.

பங்கேற்கும் அணிகள்

பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ருமேனியா, இங்கிலாந்து, செக்.குடியரசு, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, வட அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்விட்ஸர்லாந்து, அல்பேனியா, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்லோவே கியா, குரோஷியா, துருக்கி, ஹங்கேரி, ஸ்வீடன், உக்ரைன்.
« PREV
NEXT »

No comments