Latest News

November 17, 2015

உங்­களின் விடு­த­லைக்­காக தொடர்ந்தும் போரா­டுவோம்-சி.வி.விக்­கினேஸ்வரன்
by admin - 0

நாம் உங்­க­ளுக்­கா­கவே இருக்­கின்றோம். உங்­களின் போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக இருப்­ப­துடன் உங்­களின் விடு­த­லைக்­காக தொடர்ந்தும் போரா­டு­வ­தற்கு தயா­ராகவே இருக்­கின்­றோ­மென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்வரன் தெரி­வித்தார்.

பலர் இறுதிச் சந்­தர்ப்­ப­மான புனர்­வாழ்­வுக்­குட்­பட்டு விடு­த­லை­யா­வது குறித்து தமது விருப்­புக்­களை தெரி­வித்­துள்ள நிலையில் அது­கு­றித்து ஆரா­யப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

விடு­த­லையை கோரி 9ஆவது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தத்தை நேற்­றை­யதி தினம் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்ந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் மகசின் சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்த வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் கைதி­களின் நிலை­மைகள் மற்றும் அவர்­களின் கோரிக்கை தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்தார். கைதி­க­ளு­ட­னான சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
முத­ல­மைச்­சரின் விஜ­யத்தின் போது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி இரத்­தி­னவேல், மனித உரி­மை­க­ளுக்­கான இல்­லத்தின் தலைவர் ஷெரின் ஷேவியர் உள்­ளிட்­டோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

முதலமைச்சர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­த­லையை வலி­யு­றுத்தி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளார்கள். அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்­காக போரா­ட­வேண்ய பொறுப்பு எமக்­குள்­ளது.

அவர்களின் போராட்­டத்­திற்கு ஆத­ர­வா­கவும், விடு­த­லைக்கு வலி­யு­றுத்­தியும் அர­சியல் தரப்­புக்கள் உள்­ளிட்ட அனை­வரும் ஒன்­றி­ணைந்து கடந்த வெள்ளிக்­கி­ழமை பாரி­ய­ள­வி­லான ஹர்த்­தாலை அனுஷ்­டித்­தி­ருந்தோம். அர­சியல் கைதி­களின் போராட்­டத்தால் வடக்கு கிழக்கு மக்கள் ஒன்­று­பட்­டுள்­ளார்கள்.
கைதி­களின் விடு­தலை தொடர்­பாக உரி­ய­ ப­தி­லொன்றை இன்­றைய தினம் (நேற்று) அளிப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்­பின்­போது என்­னி­டத்தில் கூறி­யி­ருக்­கின்றார்.

அதனை விடவும் இன்று(நேற்று) அர­சியல் தரப்­பினர், சட்­டத்­த­ரப்­புக்கள் உள்­ளிட்ட பல்­வேறு பட்ட வகையில் பல உயர் மட்டச் சந்­திப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதன் பின்னர் உரிய பதி­லொன்று கிடைக்­கு­மென்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. அக்­க­ருத்துப் பரி­மாற்­றங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே நாம் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து தீர்­மா­னிக்க முடியும்.

கைதி­களின் கோரிக்கைக்கு அமை­வாக பொது­மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­படும் பட்­சத்தில் அவர்­க­ளின் குற்­றங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவர்­க­ளுக்­கு­ரிய புனர்­வாழ்வு வழங்­கப்­பட்டு விடு­த­லை­ய­ளிப்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

அதே­வேளை நாளை­ய­தினம் (இன்று) கைதிகள் விடயம் தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கு மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் ஒன்­று­கூடி அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஆரா­ய­வுள்ளோம்.

மேலும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலையை வலியுறுத்தி தற்­போது மேற்­கொண்டு வரும் போராட்டம் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பல்­வேறு நாடு­களின் தூத­ர­கங்­க­ளுக்கும் கடிதம் மூலம் அறி­வித்­துள்ளேன். அவர்­களும் இவ்­வி­ட­யத்தில் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி நட­வ­டிக்கை எடுப்­பார்கள் என எதிர்­பார்க்­கின்றேன்.

அண்­மையில் வடக்குமாகாண சபை அமைச்சர்கள் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். அன்றைய தினம் எனக்கு சந்திக்கமுடியாது போயிருந்தது. தற்போது அவர்களை சந்தித்திருக்கின்றேன். உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நிலை பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் ஆபத்தான கட்டத்தினை கடந்திருக்கின்றார்கள். அவர்கள் சோர்வுடன் காணப்படுகின்றார்கள் என்றார்
« PREV
NEXT »

No comments