Latest News

November 16, 2015

தீவிரவாத தாக்குதலின் எதிரொலி: பிரான்சில் போட்டிகள் நடைபெறுமா?
by Unknown - 0

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.

பிரான்சில் சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறுவதாக இருந்த யூரோ- 2016, ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பாரிசின் முக்கிய கால்பந்தாட்ட மைதானத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், குழப்ப நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் திட்டமிட்ட பிரான்சில் போட்டிகள் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போட்டி அமைப்புக்குழுவின் தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறுகையில், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள், எனவே திட்டமிட்டபடி பலத்த பாதுகாப்புடன் நடைபெறும்.

இதனை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments