பயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்களை கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், பயன்படுத்தப்பட்டது.
யுத்தம் முடிந்த பின்னால், இந்தச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இந்தச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன, பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலான புதிய சட்டத்தை வரைந்து வருவதாக தெரிவித்துள்ளன. இதனைப் பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

No comments
Post a Comment