Latest News

November 03, 2015

வருடத்துக்கு 70,000 நாடற்ற குழந்தைகள்!
by Unknown - 0

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது.

இந்த நாடற்ற குழந்தைகள் மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் நிராகரிக்கப்படுவதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

வருடத்துக்கு 70,000 குழந்தைகள் நாடற்றவராக பிறப்பதாகவும், சிரியா மோதல்களால் பாதிக்கப்பட்டு, குடியேறிகளாக, அகதிகளாக மாறியவர்கள் மத்தியில் இந்த பிரச்சினை மிகவும் அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
« PREV
NEXT »

No comments