தற்போது பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை விரைவில் அப்பதவியில் இருந்து அகற்ற ஶ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக இருந்தபோது கருணாசேன ஹெட்டியாராச்சி மில்லியன் கணக்கில் செய்த ஊழல் அம்பலமாகியுள்ளதால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊழலுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபர் கைது குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் சிக்கலுக்குள் விழும் எனக் கருதி கருணாசேன தொடர்பில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆலோசனை கோரியுள்ளார்.
எனினும் தனது பாடசாலை கால நண்பரான கருணாசேன ஹெட்டியாராச்சி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு செயற்படுவார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 'கரு இது தொடர்பில் அறிவாரா?' என்று ஜனாதிபதி தன்னிடம் இதனை தெரிவித்தவரிடம் கேள்வி கேட்டுள்ளார். இது ஜனாதிபதியால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என பிரதமர் கூறியுள்ளார்.
No comments
Post a Comment