போர் சூன்ய வலயத்தில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டுள்ளார்.
போர் சூன்ய வலயம் அமைந்திருந்த புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.தவறுதலாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
போர் சூன்ய வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற அரசாங்கத்தின் வாதத்தை பொய்ப்பிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக யுத்த சூன்ய வலயம் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக்கொடி சம்பவம் மற்றும் இசைப்பிரியா விவகாரம் போன்றன தொடர்பில் நிச்சயமாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் 40000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமத்தும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கை நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.போர் களத்தில் இடம்பெறும் சம்பவங்களை நேரடியாக கண்காணிப்பதற்கு தேவையான அதி நவீன கருவிகள் யுத்த காலத்தில் படையினரிடம் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச போர் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களில் அடிப்படையில் யுத்தம் மேற்கொள்ளபபட்டதாகத் தெரிவித்துள்ளார்.உத்தியோகப் பற்றற்ற ஆயுதக் குழுக்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவும் வழிநடத்தினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments
Post a Comment