முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எழுவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 40 லட்சம் ரூபாவை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியே கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை சமர்பிக்குமாறு நீதிபதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா, முன்னாள் ஜனாதிபதியின் பணியாளர்கள் குழுவின் பிரதான காமினி செனரத் ஆகியோரிற்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
No comments
Post a Comment