மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்த அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளில் ஒன்றாகும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தும், பேரணி நடத்தும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது நல்லாட்சி அரசாங்கத்தின் ஒர் அங்கமாகியுள்ளது.
போhட்டம், பேரணி, எதிர்ப்பு வெளியிடுவது அனைவரினதும் மனித உரிமையாகும்.
நீதிமன்றமொன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் அமைதியான முறையில் தங்களது பிரச்சினைகளை நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தனர்.
மாணவர் போராட்டம் குறித்து அறிவிக்கவில்லை என்ற பொலிஸாரின் கருத்து நகைப்பிற்குரியது.
பெட்டன் பொல்லுகளினால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த எவ்வித அவசியமும் கிடையாது.
உயர் கல்வி அமைச்சர் மாணவர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும் மாறாக அனைத்தும் நடந்தேறிய பின்னர் கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற அது குறித்து விதியில் இறங்கிப் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு என விக்ரமபாகு கருணாரட்ன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment