தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தேச விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மானமா வீரர்களுக்காக விடுதலைப் புலிகளால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நவம்பர் 27ம் நாளான மாவீரர் நாள் உலகின் பல பாகங்களிலும் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.
அவற்றின் அனைத்து தொகுப்புக்களையும் ஒரே பார்வையில் பார்க்க.
மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு
மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் அவரது தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உட்பட்டோர் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு, கிழக்கு இனம் காணப்படாத காட்டுப்பகுதியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்!
இலங்கை மண்ணில் இனந்தெரியாத சிலரினால் மிகவும் உணர்வுபூர்வமாக முன் எடுக்கப்பட்ட மாவீரர் நினைவு நாள் குறித்த செய்திகளும் படங்களும் முகநூலில் வெளியாகியுள்ளன.
வடகிழக்கு பகுதியில் உள்ள இனம் காணப்படாத காட்டுப்பகுதியில் மறைவான இடமொன்றில் குறித்த மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விளக்கேற்றலை யார் செய்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை காட்டுப் பகுதியில் நிகழ்ந்த மாவீரர் நாள்
அம்பாறை மண்ணில் இனந்தெரியாத சிலரினால் மிகவும் உணர்வுபூர்வமாக முன் எடுக்கப்பட்ட மாவீரர் நினைவு நாள் குறித்த செய்திகளும் படங்களும் வெளியாகியுள்ளன.
அம்பாறை காட்டுப்பகுதியில் மறைவான இடமொன்றில் குறித்த மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வேலணையில் மாவீரர் எழுச்சி நாள் அனுஷ்டிக்கப்பட்டது
தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிங்களப்படையின் கண்காணிப்பையும் மிறி யாழ்ப்பாணத்தில் மாவீர்ர் தினம் எழுச்சிகரமாக அணுஸ்ரிக்கப்பட்டது,
என்னதான் செய்துவிடப்போகின்றான் சிங்களவன்!
அரபு திசைகள் எங்கும் எம்மவர்கள் என் எம் மாவீரர்களுக்கு சற்று முன் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைத்தனர்...
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
லண்டன், சுவிஸ் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் வெள்ளம்
லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள, மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, முக்கிய கதவுகள் மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸில் எழுச்சி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்!
தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றநிலையில் சுவிஸ் நாட்டிலும் எழுச்சிபூர்வமாக நடைபெற்று வருகின்றது.
சற்று முன்னர் சுவிஸ் Fribourg மாநிலத்தில் forum மண்டபத்தில் தமிழீழத் தேசியக் கொடியேற்றி .ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
கனடாவில் நடைபெறும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்
அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வு
சென்னை, புதுக்கோட்டையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு
No comments
Post a Comment