Latest News

November 24, 2015

மாவீரர்கள் நினைவாக இரத்ததானம் செய்தது யாழ்பல்கலைகழக மாணவர் சமூகம்.
by அகலினியன் - 0

எம் இனத்தின் விடுதலைக்காய் மண்ணில் இரத்தம் சிந்தி சாவினை தழுவிய மாவீரர்கள் நினைவாக இரத்ததானம் செய்தது யாழ்பல்கலைகழக மாணவர் சமூகம்.

நல்லிணக்கம் என்னும் போர்வையில் பல கெடுபிடிகளையும் புலனாய்வாளர்களின் வலைவீச்சுகளின் முன்னைய அரசு போலவே மைத்திரியின் அரசும் செய்து வரும் நிலையிலும் வடக்கின் பல பாகங்களில் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தும் எமது தேசிய தலைவருடைய பிறந்ததினத்தை வாழ்த்தியும் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் திறந்த வெளி சிறையில் வாடும் எம் மக்களும் மாணவர் சமூகமும் எழுச்சி கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது எம் மாவீர கண்மணிகளையும் எம் தேசத்தலைவனையும் எந்தவொரு சக்திகளின் அடக்கு முறையாலும் சலுகைகளாலும் விலைபேசவோ மழுங்கடிக்கவோ முடியாது என்பதை உணர்த்தி நிற்கிறது. 

எம் இனம் வாழ கார்த்திகையில் உதித்த உத்தமனையும் தேச விடுதலையை இலக்காக்கி தம் இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களையும் ஒற்றை தமிழன் உலகில் உள்ளவரை அவர்களின் மனங்களில் இருந்து யாராலும் அழிக்க முடியாது என்பதை உலகமும் பேரினவாத அரசுகளும் உணரும் காலம் வெகுவிரைவில். 

மாணவர்கள் எழுச்சி என்றும் எம் விடுதலைக்கான மாபெரும் எழுச்சியாக அமையும் இதன் பிரகாரம் இன்றைய இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் பல செய்திகளை சிங்கள அரசுக்கும் உலக அரசுக்கும் எடுத்துரைக்கும் என்பது திண்ணம்.

- யாழவன் ராஜன்.














« PREV
NEXT »

No comments