சிரிய எல்லையில் ரஷ்ய இராணுவ விமானமொன்று துருக்கி போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எனினும் விமானத்தில் இருந்த விமானிகளும் கீழே குதித்து உயிர்த் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட- சிரியாவில் வைத்து ரஷ்யாவின் Su-24 ரக இராணுவ விமானமொன்றே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், துருக்கியின் F-16 ரக போர் விமானத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.
துருக்கி வான் எல்லையில் அடிக்கடி ஊடுருவுவது தொடர்பில் ரஷ்ய இராணுவ விமான விமானிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதிலும், எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து ஊடுருவியதை அடுத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானமானது, லடாக்கியா மாகாணத்தில் மலைகளில் விழுந்து நொறுங்கிய காணொளிகளும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment