முகமது இம்வாசி என அழைக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி ஜிஹாதி ஜான் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜிஹாதி ஜான் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிணையக் கைதிகளின் தலையைத் துண்டித்து அதனை வீடியோவாக வெளியிட்டு உலக மக்களை அதிர வைத்தவர் தான் இந்த ஜிஹாதி ஜான்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று அதிகாலை சிரியாவில் உள்ள ராக்கா நகர் அருகே தாக்குதல் நடத்தியது.
இதில் ஜான் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பலியானது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஜிஹாதி ஜான் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு பென்டகன் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment