முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தின் இன்றைய நிலை!
----------------------------------------------------------------------
தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை மாவீராநாள் வாரமாகும். அந்தவகையில் இன்று மாவீரர் நாளின் தொடக்கநாள்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்காண மாவீரர்கள் மாண்டு போயினர் அவர்களின் வித்துடல்களை முள்ளிவாய்க்கால் பாடசாலை அருகே விதைத்தார்கள்.
தமிழீழத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் எதிரிகளால் உடைக்கப்பட்டுள்ள போதிலும் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் உடைக்கப்படவில்லை ஏனெனில் கல்லறைகள் கட்டப்படும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் மண்ணுள் விதைந்த வீரர்களை விதைத்தவர்களுக்கு மட்டுமே தெரிகின்றது.
இன்று மேற்குறிபிட்ட துயிலுமில்லத்திற்கு சென்றபோது கார்த்திகை பூக்கள் பூத்து மிக அழகாக கட்சியளித்தது .மாவீரின் சீருடையின் ஒரு பகுதியும் அங்கே காணப்பட்டது.
அமைதியான அந்தச்சூழலில் அவர்களின் உறுதிமொழிகள் மட்டும் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.
இன்னும் ஆறு நாட்களில் இந்த இடத்திற்கு செல்லமுடியாமல் இருக்கும் இராணுவத்தினர் சுற்றிவளைத்திருப்பார்கள். உள்நுளையாதபடி….!
No comments
Post a Comment