மத்திய லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மர்ம பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, விமான நிலையத்தின் வடக்கு முனையம் மூடப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பிரான்சின் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்றிரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதையடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன் ஓரு கட்டமாக, சந்தேகப்படும்படியான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வடக்கு முனையம் மூடப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதை சஸ்செக்ஸ் பொலிஸாரும் உறுதி செய்ததாக உள்ளூர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment