உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல்கட்ட பணி நிறைவு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட வேலைத் திட்டமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களின் நினைவு ஊர்தியும் ஈரூந்திப் பயணமும் நடைபெறவுள்ளது.
இந்த ஈருருளி பேரணி நாளை கோரஜ் பார்க் (GORAGE PARK IN MITCHAM) Gorringe Park Avenue
Mitcham
CR4 2DD என்னும் இடத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி சவுத் ஹாரோவில் (CHURCH HILL MALVAN AVENUE,SOUTH HARROW) மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
மாவீரர்களின் நினைவேந்தி செல்லும் உணர்ச்சிமிக்க இப்பேரணியில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு பிரித்தானியாவின் உலகத் தமிழர் வரலாற்று மையம் அனைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
No comments
Post a Comment