Latest News

November 08, 2015

ஷேவாக் அதிரடி வீண்: சங்கக்காரா, பொண்டிங் விளாசலில் வார்னேஸ் வாரியஸ் அணி அசத்தல் வெற்றி
by Unknown - 0

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வார்னேஸ் வாரியஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டி நடப்படுகிறது.

இதில் சச்சின் டெண்டுல்கரின் சச்சினின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணியும், ஷேன் வார்னேயின் வார்னேஸ் வாரியஸ் அணியும் மோதுகின்றன.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் நேற்று நியூயார்க்கில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற வார்னே முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன் படி, சச்சின் அணிக்கு தொடக்க வீரராக சச்சின், ஷேவாக் களமிறங்கினர்.

ஷேவாக் தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்தார். இதனால் அவர் 22 பந்துகளில் 55 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். அணித்தலைவர் சச்சின் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து வந்த லட்சுமண் (8), லாரா (1) நிலைக்கவில்லை. ஜெயவர்த்தனே (18), ஹொப்பர் (11), பொல்லாக் (11) ஆகியோர் ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர்.

மொயின் கான் 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க, சச்சின் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது. அம்ரோஸ் (1), முரளிதரன் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வார்னே அணி சார்பில், வார்னே, சய்மொன்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து வார்னே அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய காலிஸ் (13), ஹேடன் (4) நிலைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பொண்டிங், சங்கக்காரா (41) அதிரடி காட்டினர்.

சய்மொன்ஸ் (1) ஏமாற்ற, ஜாண்டி ரோட்ஸ் 3 சிக்சர்கள் விளாசி 20 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் வார்னே அணி 17.2 ஓவர்களிலே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பொண்டிங் 48 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாக வார்னே தெரிவு செய்யப்பட்டார்.





« PREV
NEXT »

No comments