அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வேதாளம் தெலுங்கு பதிப்பை நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்றே வெளியிட திட்டமிட்டனர்.
ஆனால் நாகர்ஜுன மகன் நடிப்பில் அகில் திரைப்படம் மிக பிரமாண்டமாக ஆந்திரா முழுவதும் வெளியாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படமும் நடிகர் ராம்சரண் குரலில் ஆந்திராவில் உள்ள முக்கிய திரையரங்குகளை கைப்பற்றியுள்ளது.
இதனால் வேதாளம் தெலுங்கு பதிப்பு (ஆவேஷம்) படம் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போல் தூங்காவனம் படமும் 10 ம் தேதி வெளியாக இருந்து தற்போது 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment