Latest News

November 03, 2015

சென்னையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்செல்வன், தமிழினி ஆகியோரின் நினைவு நிகழ்வுகள்
by Unknown - 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு வேங்கைகளின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் கேணல் தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வும் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாளாகிய நேற்று, மாலை 6 மணிக்கு சென்னை C.I.T.காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் இடம்பெற்றது.

தமிழினியின் கனவுகள்... என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வில், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அவருடன் வீரச்சாவடைந்த லெப்.கேணல். அலெக்ஸ், மேஜர். செல்வம், மேஜர். மிகுதன், மேஜர். கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் மற்றும் கேணல். தமிழினி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மல்லை சத்தியா, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், த.மணிவண்ணன், இயக்குநர் கௌதமன், ஆவல் கணேசன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த செம்பியன் ஆகியோருடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூத்த சகோதரர் மூர்த்தி அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

தமிழினி அவர்களின் நினைவாக தமிழினி என்று பெயர்சூட்டப்பட்ட சிறுமி கேணல் தமிழினி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்டவர்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.

கேணல். தமிழினி அவர்களிற்கு வட மாகாணசபை முதலமைச்சர் நீதியசர் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட நினைவு வணக்க அறிக்கையினை தமிழீழ ஆதரவாளர் டேவிட்பெரியார் அவர்கள் படித்தார்.

தமிழினி அவர்கள் நினைவாக ஈழக் கவிஞர் ஈழவன் எழுதிய கவிதையினை இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களும் கேணல். தமிழினி அவர்கள் இறப்பதற்கு முன்பான காலப்பகுதியில் எழுதியிருந்த கவிதையினை செம்பியனும் படித்தார்கள்.

நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செலவன் மற்றும் கேணல் தமிழினி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.









« PREV
NEXT »

No comments