பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான ( Z ) வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகளை www.ug.ac.lk என்ற இணைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
No comments
Post a Comment