கடந்த 30 வருட காலத்தின் போது எமது இளைஞர்யுவதிகள் ஆயுதங்கள் வாயிலாக தமது மன உறுதியை காட்டி வாழ்ந்தார்கள். இனி விளையாட்டுக்கள் மூலமாகவும் கல்வி மூல மாகவும் வேறு வழிகளிலும் எமது மன உறுதியை வெளிக்காட்டும் காலம் உதயமாகியுள்ளது என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாகாண பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி ஒதுக்கீட்டின் நிதியத்தில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்ட பல் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழா நேற்றுக்காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த விளையாட்டு அரங்கை திறந்துவைத்த பின் உரையாற்றுகையிலேயே வட மாகாண முதலமைச்சர் க.வி.விக் னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
குறித்த பல் தொகுதி உள்ளக விளையாட்டரங்கினை கட்டி முடிக்க பணம் போதவில்லை. எனவே தொடர்ந்து பெற்ற நிதியங்களைக் கொண்டு 2014ம் ஆண்டிலேயே இது பூர்த்தி செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக மூன்று வருட ஒதுக்கீடுகளில் இருந்து சுமார் 350 லட்சம் செலவில் வட மாகாணத்தில் முதல் பல்தொகுதி விளையாட்ட ரங்காக இது கட்டி முடிக்கப்பட்டது. விடாப்பிடியாக நின்று இதைக் கட்டி முடித்த சகலருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. பூப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம் மற்றும் டெனிஸ் போன்ற விளையாட்டுக்கள் விளையாட வசதி படைத்தது இந்த விளையாட்டரங்கு.
அண்மைக் காலங்களில் எமது விளையாட்டுத்துறை மாகாணரீதியாகவும் தேசிய ரீதியாகவும் படிப்படியான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றன. வீர வீராங்கனைகளுக்கான வசதிகளும் ஊக்குவிப்புக்களும் எமக்கு ஒதுக் கீடு செய்யப்படும் நிதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுமார் 30 வருட காலத்தின் போது எமது இளைஞர் யுவதிகள் ஆயுதங்கள் வாயிலாக தமது மன உறுதியை காட்டி வாழ்ந்தார்கள். இனி விளை யாட்டுக்கள் மூலமாகவும் கல்வி மூலமாகவும் வேறு வழிகளிலும் எமது மன உறுதியை வெளிக்காட் டும் காலம் உதயமாகியுள்ளது.
அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோண் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்பொழுது அங்கு பேசிய போதைப் பொருள்தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வடமாகாணம் விரைவில் மற்றைய மாகாணங்கள் சகலதையும் பின்நிறுத்தி எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைந்து விடும் என்ற கருத்தை அங்கு முன் வைத்தார்.
முன்னைய இயக்க இளைஞர்களே இந்தியாவில் இருந்து போதைப் பொருட்களைக் கடத்தி வந்து இங்கு விற்றுப் பணம் சம்பாதிக்கின்றார்கள் என்ற கருத்தை அங்கு அப்போது அவர் முன்வைத்தார். அப்போது தான் அவர் எம்மை அவ்வளவு உயர்த்தி வைத்துப் பேசியதன் மர்மம் புரிந்தது. உடனே ஆயுதம் ஏந்திய 150, 000 இராணுவ வீரர்கள் பரந்து கிடக்கும் வடமாகாணத்தில் ஒரு சில தமிழ் இளைஞர்கள் போதைக் கடத்தலில் மிக வெற்றிகரமாக ஈடுபட்டிருக் கின்றார்கள் என்று கூறுகின்றீர்களா என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறவில்லை.
No comments
Post a Comment