Latest News

October 05, 2015

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் வரலாறு
by அகலினியன் - 0

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் வரலாறு

தமிழீழக் கடல்

தமிழீழத்தைப் பொறுத்தளவில் , இது மிக மிகப் பிரதானமானது.

எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது.

தமிழீழ நிலப்பகுதிய எங்கள் கடல் மூன்று பக்கங்களில் அரவணைத்தபடி உள்ளது.

பலர் நினைப்பதுபோல எமது பாரம்பரிய வாழிடமான நிலப்பகுதி , மட்டும்தான், தமிழீழத் தாயகம் அல்ல.

பெருமையும், பழமையும், செழுமையும் கொண்ட இந்தக் கடலும் நிலமும் இணைந்தது தான், எமது தமிழீழத் தாயகம் ஆகும்.

இது எங்கள் கடல்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எமது முன்னோர்களின் சமூக, பொருளாதார வாழ்வோடு இது பின்னிப்பிணைந்து நிற்கிறது.

எமது முன்னோர்களின் கட்டுபரங்களும், வாணிபக் கப்பல்களும் , போர்ப் படகுகளும் இக்கடலன்னையின் மடியில் தான் தவழ்ந்து திரிந்தன.

தமிழீழக் கடல் , பொருளாதார ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , வெளி உலகவர்த்தகத் தொடர்புகளுக்காகவும் முக்கியம் பெறுகின்றது.

ஆனால் அதைவிட முக்கியமாக , தமிழீழத்தின் பாதுகாப்புக்கு இக்கடல் மிகமிகப் பிரதானமானது.

இக்கடல் எமது கட்டுப்பாட்டில் உள்ளவரை மட்டும்தான் அதனால் வரும் பொருளாதார நன்மைகளையும் , அரசியல் நன்மைகளையும் எமது மக்கள் அனுபவிக்கமுடியும்.

ஆகவே எமது கடல், எமது தேசத்தின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.

ஆசியாவிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலையைக் கொண்டிருப்பது , எமது கடலின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இது தவிர, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல துறைமுகங்களையும், பொருளாதார மையங்களையும் எமது கடல் கொண்டிருக்கிறது.

தமிழீழத் தாயக மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் கருக்கொண்டு ஆரம்பமாகிய முனைய காலத்திலும் சரி, அது முனைப்புற்று வளர்ந்து செல்லப்படும் நிகழ்காலத்திலும் சரி, விடுதலைக்குப் பின் நிருவப்படப்போகின்ர தனியரசு ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு , பொருளாதாரம், அரசியல் ஆகிய விடயங்களைத் தீர்மானிக்கும் எதிர்காலத்திலும் சரி, எமது கடல் மிகப் பிரதான பங்கு வகித்தது – வகிக்கப்போகின்றது.

இப்படியாகப் பல பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்ற பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள – எங்கள் கடலை , நாம் சிறீலங்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் , தமிழீழக் கடற்பரப்பில் நாம் எதிரியை விடப் பலம் பொருந்தியவர்களாக மிளிர வேண்டும். இந்த யதார்த்த உண்மையை அன்றே புரிந்துகொண்ட எமது ” தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் ” அவர்கள் , பல வருடங்களுக்கு முன்னரையே அதற்க்கு வேண்டிய திட்டங்களைத் தயாரித்து , படிப்படியாக அதற்க்கு நடைமுறை உருவமும் கொடுத்துள்ளார்.

சிங்களப் பேரினவாத அரசிடம் இருந்து எமது தாயகத்தை மீட்டேடுப்பதற்க்கான போராட்டம் என்னும் போது , தமிழீழத் தாயகத்தின் தரை எல்லைகளையும் – கடல் எல்லைகளையும் விடுவிப்பது என்பதையே , அது குறித்து நிற்கிறது.

எனவே , தமிழீழத் தாயகத்தின் ஒரு பகுதியாகிய தரையில் பிரமானடமான வளர்ட்சியுடன் இருக்கும் எமது தரைப்படையைப் போன்று தமிழீழம் தனக்கென்று ஒரு கடற்படையையும் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம்.

எமது மக்களின் சுதந்திர எழுட்சியை உற்று நோக்குவோமானால் , அது புரட்சிகர ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தபின் , எந்த அளவுக்குக் கடலோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது , என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழீழம் , தரைத் தொடரில் தனது எல்லையாக சிறீலங்காவை மட்டுமே கொண்டிருக்கிறது. ஏனைய திசைகளில் கடலிலேயே எமது எல்லைகள் இருக்கின்றன. எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ட்சிக்கட்டத்திலும் , தமிழீழக் கடல் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

இச்சூழ்நிலையிலேயே 1984 ஆம் ஆண்டு , தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் , விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் படைப் பிரிவுக்கு அதன் வரலாற்றுரீதியான பிறப்பைக் கொடுத்து , ஆரம்பத்தில் அதற்கு ” கடற்புலிகள் ” எனப் பெயரும் சூட்டினார்.

ஆரம்பத்தில் கடற்புலி அணியினருக்கு கடல் சம்பந்தமான அறிவு ஊட்டப்பட்டதுடன் , கடற் சண்டைகளுக்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

ஆனால் கடற்புலி அணியினர் எதிரியிடம் வலிந்து சென்று கடற் சண்டைகளில் ஈடுபடுவதைத் தவித்தார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் அந்தந்தக் காலங்களோடு ஒட்டிய தேவைகளை நிறைவு செய்யும் பல பணிகளை , அவர்கள் ஆற்றவேண்டியிருந்தது. 

கடற்பயணங்கள் போவதற்கும் அவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்க்குமான வேலைகளையே ஆரம்பத்தில் கடற்புலி அணியினர் செய்து வந்தனர்.

எனினும் சிறீலங்கா கடற்படையினரின் போர்ப் படகுகள் மீது , ஆங்காங்கே ஒருசில கடற்கண்ணித் தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளனர்.

1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து 6 வருடங்களாகப் பெரிய அளவிலான கடற் சண்டைகள் எதிலுமே ஈடுபடாதிருந்த கடற்புலி அணியினர் , 1990 ஆம் ஆண்டு திரும்பவும் சிறீலங்கா இராணுவத்துடன் போர் ஆரம்பமாகிய போது , கடற் சண்டைகளில் ஈடுபடத் தொடங்கினர்.

இக் கடற்போரிலும் கரும்புலித் தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு , கடற்போர் ஓர் புதிய பரிமாணத்திற்குள் சென்றது.

இந்த வகையில் சிறீலங்காக் கடற்படை மீதான தனது முதலாவது பாரிய தாக்குதலை , 10.07.1990 அன்று வல்வைக்கடலில் வைத்துக் கடற் கரும்புலிகள் மேற்கொண்டனர்.

வெடி மருந்து நிரப்பிய படகொன்றுடன் சென்ற கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன் , கப்டன் கொலின்ஸ் , கப்டன் வினோத் ஆகியோர் சிறீலங்கா கடற்படியின் ஒரு போர்க் கப்பலைச் தேதமாக்கி , இந்த வீரசாதனையைப் படைத்தார்கள்.

இதே போன்று 04.05.1991 அன்றும் வல்வைக் கடலில் வைத்துக் கட்டளைக் கப்பலொன்று கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டது. இதுவும் ஒரு கரும்புலி நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கப்டன் சிதம்பரம் , கப்டன் ஜெயந்தன் ஆகியோர் வீரச்சாவை அனைத்துக்கொண்டனர்.

தமிழீழக் கடற்பரப்பில் சுதந்திரமாக உலாவந்த சிங்களக் கடற்படையினருக்கு இவ்விரண்டு கரும்புலி நடவடிக்கைகளும் பீதியைக் கொடுத்திருந்தன. அத்துடன் தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படை வைத்திருந்த கடல் ஏகபோகம் உடைந்து சிதறியது.

தமிழ் மக்களாகிய நாம் ஒரு யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நிலங்களை விடுவிக்கும் அளவிற்கு முன்னேறியபோது , சிறீலங்கா அரசானது கடல் மூலமே தனது படைபலத்தைப் பிரயோகித்து , எமது முன்னேற்றத்தைத் தடுக்க முயன்று வருவதை , நாம் கண்டு வருகின்றோம். அதாவது , தரையுத்தத்தை வெல்ல எதிரி கடலையே பயன்படுத்தி வருகின்றான்.

1987 ஆம் ஆண்டு வடமராட்சியைக் கைப்பற்ற ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” என்ற இராணுவ நடவடிக்கையைச் சிங்களப்  படைகள் நடாத்திய போதும் , 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாமை நாம் வெற்றிகொள்ள முயன்ற சமயத்திலும், 1991 ஆம் ஆண்டு சிலாவத்துறை முகாமை நாம் கைப்பற்ற முயன்ற சமயத்திலும் , 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரின்போது எம்மிடம் விழ்ட்சியடையும் நிலையில் இருந்த ஆனையிறவுத் தளத்தைப் பாதுகாக்கும் போதும். சிறீலங்கா அரசு கடல்வழி மூலமே தனது பலத்தைப் பிரயோகித்து எமது முயற்சிகளுக்குக் குறுக்கே நின்றது.

இதற்குப் பிரதான காரணம் எமது கடலில் எதிரி வைத்திருந்த கடல் ஏகபோகம்தான்.

தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் அடிக்கடி கூறுவார் :

”புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே , கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி , எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடல் ஆதிக்கத்தைத் தகர்த்து , எமது கடலில் நாம் பலம் பெறும் போதுதான் , விடுவிக்கப்படும் நிலப்பகுதியை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்வதுடன் , தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படியையும் விரட்டியடிக்க முடியும்.”

ஒரு கடற்படையை நாம் கட்டியெழுப்ப வேண்டுமாயின் , ஏராளமான பொருட் செலவைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும். தரைச் சண்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் , உபகரணங்களின் பெறுமதியைவிடக் கடற் சண்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுத் உபகரணங்களின் பெறுமதி மிக மிக அதிகமாகும். எனவே ஒரு கடற்படையைக் கட்டி வளர்க்கப் பொருளாதார பலமும் தேவை.

தமிழீழத்தைப் பொருத்தவரை வெளியுலகத் தொடர்புகளுக்கும் , போராட்டத்திற்குத் தேவையான விநியோகங்களுக்கும் , அதற்குரிய செயற்பாடுகளுக்கும் கடலே பிரதான வழியாக இருக்கிறது.

எமது தரை எல்லையை (சிறீலங்காவுடனானது ) இதற்க்கு நாம் பயன்படுத்த முடியாது.

எனவே போக்குவரத்து , விநியோகங்கள் , உலகத் தொடர்புகள் யாவுமே கடல்மூலமே உள்ளன.

எனவேதான் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து , கடற்பரப்பில் அவனது நடமாட்டத்தைத் தடுக்க வேண்டியது , மிகமிக அத்தியாவசியமானது. அப்போதுதான் எமது தாயகப் போர் வெற்றிபெற முடியும்.

1984 ஆம் ஆண்டிலிருந்து கடற்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட எமது கடல் அணி , 1991 ஆம் ஆண்டு பிற்பகுதியில் , ” விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ” என்ற புதிய பெயருடன் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இக்காலத்தில் இதன் சிறப்புத் தளபதியாக சூசை அவர்களும் , தளபதியாக கங்கை அமரன் அவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.

இக்காலத்திலேயே சிறீலங்காக் கடற்படையினர் மீது கடலில் வைத்தும் , கடற்கரையோரங்களில் உள்ள காவலரண்கள் மீது , பல வெற்றிகரமான தாக்குதல்களை கடற்புலிகள் நிகழ்த்தினார்.

இத்தொடரான தாக்குதல்களின்போது , கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் சில , பல்வேறு முனைகளிலும் தாக்கி அழிக்கப்பட்டன.

ஆனையிறவுக் கடல்நீரேரியில் வைத்து 41 அடி நீளமான அதிவேகச் சண்டைப் படகொன்று , கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் , நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையுடன் வெற்றிகரமான படகுச் சந்தைகளிலும் கடற்புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

இக் கடற் தாக்குதல்களிலும் – கடற் சண்டைகளிலும் கணிசமான சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

கடற் கண்ணித் தாக்குதல்களை நிகழ்த்துவதில் இருந்து , நவீன மயப்படுத்தப்பட்ட சிங்களக் கடற்படைக்கெதிராக நேரடித் தாக்குதல்களையும் , கடற் சண்டைகளையும் நடத்தக்கூடிய அளவிற்கு விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியினர் பெற்ற வளர்ட்சி , சிறீலங்காவின் படைத்துறைத் தலைமையைத் திணறடித்துள்ளது. இதன் காரணமாக , கடற்படையின் பலத்தை நம்பிப் போராட்டத்தை நசுக்க அவர்கள் உருவாக்கிய நீண்டகால நோக்கிலான போர்முறைத் திட்டமும் கேள்விக் குறியாகிவிட்டது.

அத்துடன் அண்மைக் காலத்திலிருந்து , தமிழீழக் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் மேலாதிக்கம் படிப்படியாகச் சரிந்துகொண்டிருப்பதையும் காணலாம். அதனால் தமிழீழம் மீதான் தனது ஆக்கிரமிப்புப் போர் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்குவதையும் , சிங்கள ஆளும் வர்க்கம் உணரத் தொடங்கியிருக்கும்.

தமிழீழக் கடலன்னை தியாகத்தாலும் , சோகத்தாலும் உருவான ஒரு மகத்தான காவியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறாள்.

எத்தனை இனிய தோழர்கள் …

எவ்வளவு திறமையான கடலோடிகள் ….

மீனுக்கு இணையான நீச்சல்காரர்கள் ..

தியாகத்தின் உயர் வடிவமான கடற் கரும்புலிகள் !

சாவு வரும் என்பதைத் தெரிந்தும் இவர்கள் பயணம் போனார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணம் போனபோது , கரையிலே நின்று கைவீசி அனுப்பிவைத்தோம். ஆனால் நாம் பார்த்துக்கொண்டிருந்த போதே , அந்தப் பரந்த கடலோடு கரைந்து போனவர்கள் பலர்.

தமிழீழக் கடலைன்னியின் மடியிலேயே இரவும் பகலும் கிடந்தது , பணியையும் குளிரையும் , தம்முயிரையும் பாராது கடலோடிய தமிழீழத் தாயின் புதல்வர்களில் எத்தனையோ பேர் , அந்த உப்பு நீருடனேயே சங்கமமானவர்கள்.

இது எங்கள் கடல் ; இது தமிழீழத் தாயகத்தின் இணைபிரியாத ஒரு அங்கம். அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து இது மீட்க்கப்பட வேண்டும். அதற்காகவே கடற்புலிகள் உயிரையும் மதியாது பயணம் போய் , உன்னதமான தியாகங்களைப் புரிந்து , வீர காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு நாள் , நிற்சயமாக எங்களின் கடற்படைக் கப்பல்கள் எங்களின் கடலில் பவனிவரும் ; அப்போது எங்களின் இளைய பரம்பரையினர் பயமின்றி , சுதந்திரமகா எங்களின் கடலில் உலாவருவார்கள்.

நீரடி நீச்சல் படையணியின் சாதனை !

”1995.04.19 அன்று , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் ஊடுருவித்தாக்கி , சிறீலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு அதிவேகப் பீரங்கிப் படகுகளை கடற்கரும்புலிகள் தகர்த்தழித்துள்ளனர். இவ்வெற்றிகரமான தாக்குதலை , விசேட படையணிகளான ” சிலோஜன் ” – ” அங்கையற்க்கண்ணி ” நீரடி நீச்சல் படையணிகள்தான் மேற்கொண்டுள்ளன. விடுதலைப்ப்புலிகளின் படைவளர்ட்சியில் , மேலே கூறப்பட்ட சம்பவத்தின் ‘ இராணுவப் பரிமாணத்தை ‘ எமது மக்களுக்கு எடுத்து விளக்குவதே , இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு இராணுவ நடவடிக்கையைப் பொருத்தவரையில் அது மேற்கொள்ளப்படும் இடம் , தாக்குதலை நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்த சர்ந்தப்பம் , நடவடிக்கையில் வெற்றியீட்டுவதன் பொருட்டு எம்மால் குறித்த நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் அல்லது பிரயோகிக்கப்படும் இராணுவவளம் என்பன முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே இவ் வெற்றிகரமான நடவடிக்கையின் பரிமாணத்தை நோக்குவதற்கு , இவற்றைத் தனித்தனியே ஆராய்வதே பொருத்தமாகும்.

தாக்குதல் நடாத்தப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினைப் பொருத்தவரையில் , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையானது முற்றாகத் தமது கட்டுப்பாட்டிலேயே உள்ளதென எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்ற அதே வேளையில் , இங்கு அமைந்துள்ள துறைமுகமானது உலகிலே பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகும். 2 ஆம் உலகப் போர்காலகடடத்தில் , பிரித்தானியா பேரரசின் ‘ றோயல் கடற்படை ‘ யால் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ HMS Highflyor ‘ எனும் இத்தளம் , 1957 ஒக்ரோபர் 15 ஆம் திகது சிறீலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது. தேவநம்பியதீச மன்னரின் நினைவாக இத்தலத்திற்க்கு சிறீலங்கா கடற்படை ‘ SLNS Tissa ‘ எனும் பெயரிட்டு , அத்தளத்தை கிழக்குக் கடற் பிராந்தியத் தலைமையகமாக்கியதுடன் , சிறீலங்கா கடற்படையின் கப்பல்கள் கட்டும் நிறுவனத்தையும் கடற்படையின் பயிற்சிக்கல்லூரியையும் திருகோணமலையில் நிறுவியது.

இவ்வாறு அன்று நிறுவப்பட்டவை அனைத்தும் வளர்ச்சியுற்று , சிறீலங்காக் கடற்ப்படையின் நடவடிக்கைகளுக்கான தலைமையகமாக இன்று விளங்குகின்றன. இதனை வேலைத்திட்டங்களாக சிறுரக கடற்படைப் படகுகளைக் கட்டுதல், சேவையில் ஈடுபடும் கலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல், கிழக்குப் பிராந்திய கடற் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் , புதிதாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் – சிப்பாய்கள் ஆகியோருக்கான அடிப்படைப் பயிற்சிகள் , துறைசார்ப் பயிற்சிகள் என்பவற்றை வழங்குதல் ஆகியவற்றுடன் , அதிவேகப் பீரங்கிப் படகுகளின் அணி , மற்றும் அதிவேகத் தாக்குதற் படகுகளின் அணி என்பனவும் இங்குதான் நிலைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் இத்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மேலும் , இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது , விடுதலைப் புலிகளின் இராணுவ வரலாற்றில் முக்கிய நிகழ்வேன்றே கூறலாம். அதாவது , இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின்னர் , சந்திரிக்கா அரசுடன் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து , தமது கோரிக்கைகளை அரசு நிறைவேறாத நிலையில் , தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவையும் விதித்தனர். புலிகள் விதித்த காலக்கேடுவினைக் கணக்கெடுக்காமல் இருந்த சந்திரிக்கா அரசுக்கு முதலாவதும் , தெளிவுமானாதும் , வெற்றிகரமானதும் , கரும்புலிகளால் நடாத்தப்பட்டதுமான தாக்குதல் இதுவாகும். 

எனவே , இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சர்ந்தப்பமும் வரலாற்றுப் பதிவாகும்.

அடுத்ததாக , இவ்வெற்றிகரமான தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட இராணுவ வளமானது வியக்கத்தக்க தொன்றாகும். 

அதாவது 1984 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறுதொகை உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ” கடற்புலிகள் ” எனும் சிறு பிரிவானது வளர்ச்சியுற்று , 1991 இல் , ” விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ” எனப் பெயர் சூட்டப்பட்டு , நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்ட பின்னர் , விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையெல்லாம் கடற்புலிகளின் பங்கு இன்றியமையாதது. அது மட்டுமன்றி , கடற்புலிகள் செயற்படத் தொடங்கி ஓரிரு வருடங்களிலேயே பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு , தமிழீழத்தின் குறிப்பிடக்கூடியளவு கடற் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் ; இதனை எதிரிகளின் இராணுவ ஆய்வாளர்கள் கூட இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் , உலகிலேயே பாரிய கடற்படைகளைக் கொண்டிருக்கும் நாடுகளைத் தவிர , கடர்படையென்ற ஒன்றைக் கொண்டிருக்கும் அனைத்தூச் சின்னஞ்சிறு நாடும்கூட – அவை அளவிலும் ஆற்றலிலும் மட்டுப்படுத்திருந்தபோதும் – ஏதாவதொரு வகையில் தமக்க்கெனவோர் விசேடபடையணிகளை , கடலில் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக உருவாக்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவைகளாக…

● அமெரிக்கக் கடற்படையின் விசேட நடவடிக்கை குழுவான – ‘ சீல் ‘ ( Seal )

● சோவியத் கடற்படியின் சிறப்புக் குழுவான – ‘ ஸ்பெற்நாஸ் ‘ ( Septsnaz )

● பிரித்தானியக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் – ‘ றோயல் மரீன்கள் ‘ ( Royal Marines )

● கிழக்கு யேர்மனியின் கடற்படை மற்றும் காலாட்படைச் சிறப்பணியின் – ‘ ஏண்ஸ் மொறிற்ஸ் ஆண்ற் ‘ ( Ernts Moritz Arnd )

● போலந்து நாட்டுக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவான – ‘ லுசிக்கா ‘ ( Luzycka )

● இத்தாலி நாட்டுக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவான – ‘ கம்மா ‘ (கம்மா )

● சுவீடன் நாட்டுக் கடற்படையின் விசேட இடுபணிக் குழுவான – ‘ றேஞ்சர்ஸ் ‘ ( Rangers ) போன்றவை உள்ளன.

இவை யாவும் வல்லரசு நாட்டு கடற்படையணிகளின் சிறப்புநடவடிக்கைக் குழுக்கலாகவுள்ள போதும் , இவர்களனைவரும் சாதாரண நீராடிச் சுழியோடிகளாகவும் செயற்படுகின்றனர். இவ்வாறான விசேட படையணியிலுள்ள உறுப்பினர்களை ‘ தவளை மனிதர்கள் ‘ ( Frogmen ) என அழைப்பார்கள். மேலே கூறப்பட்ட இவ்விசேட படையணிகளது செயற்பாடானது , 2 ஆம் உலக மகாயுத்தத்தின் வெற்றியினைத் தீர்மானித்ததும் இதுவரை உலகில் இடம்பெற்றவ்றில் பாரிய கடல்தரையிறக்க நடவடிக்கையுமான ‘ நோர்மண்டி தரையிறக்கத்தில் ‘ நேசநாட்டுப் படையணிகளாலும் ; அதன் பின்னர் இடம்பெற்ற பனிப்போர்க் காலத்திலும் ; 1980 இன் ஆரம்பங்களில் இடம்பெற்ற வளைகுடா யுத்தம் , போக்லண்ட் யுத்தம் ஆகியவற்றில் ; 1990 களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ‘ பாலைவனபுயல் ‘ நடவடிக்கைகளிலும் மாபெரும் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தன.

இப்பிரிவனர் தமது பிரதான இடுபணியை நிறைவேற்றுவதன் பொருட்டு நீரடி தகர்ப்புக் குழுக்களை ( Underwater Demolition Teams – UDT ) எனும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவர்களது மேலதிக பணிகளாக – எதிரிகளால் தமது பிரதேசத்தினுள் மேற்கொள்ளப்படும் தரையிறக்க நடவடிககிகளின் போது , அவற்றை முறியடிக்க கரையோரப் பிரதேசங்களில் ஊடுருவிப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல்; எதிரிகளின் கப்பலணிகளின் பின்னால் தொடர்ந்து சென்று எதிரியின் நகர்வுப்பாதைகள் , கப்பல்களின் தொழினுட்பம் பற்றிய வேவுகள் அறிதல் ; தமது பிரதான கடற்கலங்கள், கடற்தளங்கள் என்பவர்ரியா எதிரியிடமிருந்து பாதுகாத்தல்; தம்மால் மேற்கொள்ளப்படும் தரையிறக்கம் ஒன்றின்போது தமது துருப்புக்களுக்குப் பாதுகாப்பு வழங்கல்; எதிரியின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தினுள் ஊடுருவி, பிரதான இலக்குகள் மீது தீடிர் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் போன்றவையும் அடங்கும். 

இவ்வாறான தமது பணிகளுக்காக, இவர்கள் நீரடி நீச்சளுக்கான ‘ ஸ்குபா ‘ உபகரணம் , (Scuba – Single Cylinder Underwater breathing Aparatau ) மற்றும் கடலினுள் பயன்படுத்தப்படும் ‘ ஸ்கூட்டர் ‘ (Sea Scooter) மற்றும் காற்றடிக்கும் படகுகள் (Baloon Boats) சிறுரக நீர்முழ்கிகள் ( Midgt Submarines ) நீரடி வாகனங்கள் (underwater Vehicles) நீரடியில் பயன்படுத்தப்படும் கைத்துப்பாக்கிகள் (underwater Pistol ) என்பவற்றையே பயன்படுத்துகின்றனர்.
இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன் நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் ” தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து, இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. 

சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு, இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும் !

கடற்புலிகளின் வளர்ச்சியும் போரில் திருப்புமுனைகளும்

சிங்கள தேசத்து படைத்துறையின் முதுகெலும்பாக இன்று விளங்குவது , அதன் கடலாதிக்கம்தான். வடதமிழீழத்தில் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் படைமுகாம்களுக்கான சகல விதமான் விநயோகங்களையும் , ஆபத்துக்காலகட்டங்களில் அவசர உதவிகளையும் கடற்படையே வழங்கி , படைமுகாம்களைப் பாதுகாத்து , பராமரித்து வருகின்றது.

சிங்களப் படைத்துறைக்கும் வடதமிழீழதக் கரையோரமுள்ள படைமுகாம்களுக்குமிடையே தொப்புள்கொடிபோல நின்று செயற்படும் சிங்களக் கடற்படையின் பலம் சிதைக்கப்பட்டால் , எமது விடுதலைப் போராட்டம் பாரிய திருப்புமுனை ஒன்றைச் சந்திக்கும்.

ஈழத்தமிழினம் ஆவலுடன் எதிர்பார்க்கும் , இத்திருப்புமுனைக்குரிய காலம் கனிந்து வருவதைத்தான் , கடந்த மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்த , கிளாலிக் கடல்நீரேரித் தாக்குதலும் பருத்தித்துறைப் பெருங்கடற் தாக்குதலும் சுட்டிக்காட்டியுள்ளன.

கடற்புலிகளின் வளர்ட்சியால் ஏற்பட்டுவரும் இத்திருப்புமுனை , எமது விடுதலைப்போரின் பரிமாணத்தை – தமிழினத்திற்கு சார்பான முறையில் – மாற்றியமைக்கும் என்பது திண்ணம்.

எமது விடுதலைப்போரில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துக்கொண்டிருக்கும் கடற்புலிகள் அமைப்பைக் கட்டி வளர்ப்பதில் தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் பேரார்வம் காட்டிவருகின்றார்.

சிங்களக் கடற்படையுடன் ஒப்பிடும் போது , பலமும் – வளமும் குறைந்த நிலையிலும் எதிரியை வெற்றிகொள்வதற்குரிய தந்திரோபாயங்க்களையும் – தாக்குதல் திட்டங்களையும் வரைந்து கடற்புலிகளின் பலத்தைப் பெருக்க , தேசியத்தலைவர் தீவிர கவனம் செலுத்துகின்றார்.

ஆனையிறவுச் சமரையடுத்து 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் , விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் என்ற பெயர்மாற்றத்துடன் வேகங்கொண்ட கடற்புலிகளின் செயற்பாடுகள் , இந்த இரண்டு வருடத்தில் , போரின் போக்கையே தீர்மானிக்கும் அளவுக்கு ஒரு நிர்ணய சக்தியாக வளர்ந்துவிட்டது.

அதுவும் கடந்த மாதம் கிளாலிக் கடலேரியிலும் , பருத்தித்துறைப் பெருங் கடலிலும் – நான்கு நாள் இடைவெளிக்குள் – கடற்புலிகள் மேற்கொண்ட இரண்டு தாக்குதல்களின் தன்மைகளும் , கடற்புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியுள்ளன.

இலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள் என்ற கருத்துடன் , இரண்டு கடற்படைகள் என்றும் மதிப்பிடத்தூண்டும் அளவுக்கு , கடற்புலிகள் ஒரு சக்தியாக உருவாகிவிட்டனர்.

கடற்புலிகளின் இந்த வளர்ட்சி , சிங்களப் பேரினவாதிகளைக் கலக்கமடையச் செய்துவிட்டது. அவர்களது கலக்கத்திற்கு காரணமுண்டு.

ஈழப்போர் – 2 சிங்கள அரசுக்குப் போதித்த பாடங்களுள் ஒன்று. கடல்வழித் தொடர்பு இல்லாத படைமுகாம்கள் (எல்லைப்புரங்ககுள் தவிர) நிலைத்திருக்க முடியாது என்பதுதான் ( கொக்காவில் , மாங்குளம் , ஆனையிறவு அதற்கு உதாரணங்கள்).

ஆனால் , இன்று அந்தக் கடல்வழித் தொடர்புக்கு ஆதாரமாக இருந்துவரும் சிங்களக் கடற்படைக்கே , சோதனைக்காலம் தொடங்கிவிட்டது.

ஆனையிறவுச் சமரின் பின் , குடாநாட்டுக்கான சகல தரைப்பாதைகளையும் துண்டித்து , யாழ் – குடாநாடு மீது ஒரு முழுமையான இராணுவ முற்றுகையை இட்டு , பொருளாதாரத் தடையைப் பூரணமாக அமுல்படுத்தி – பொதுமக்களைப் பட்டனிபோட்டு , அவர்களின் உறுதிப்பாட்டை உடைப்பதுடன் புலிகள் இயக்கத்தையும் அழித்து , விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்க அரசு பெருமுயற்சி செய்தது. இதனைக் கண்ட குடாநாட்டு மக்களில் ஒரு பகுதியினர் இடிந்துபோய் பீதியில் இருந்தனர்.

புலிகள் இயக்கத்தின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது எனப் பேரினவாதிகள் அகமகிழ்ந்திருந்தனர்.

அப்பொழுதுதான் , கடற்புலிகள் கடலிலே காவியம் படிக்கத் தொடங்கினர். 

கிளாலிக் கடல்நீரேரி பிரதான பெரிய களமாகவும் , போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மாறத் தொடங்கியது.

படையினரின் பயமுறுத்தல்களையும் அரசின் தடைச் சட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு , கடல்நீரேரி ஊடாக மக்கள் பயணம் போகத்தொடங்கியபோது , அதனைத் தடுக்கச் சிங்களக் கடற்படை செயலில் இறங்கியது. கடல்நீரேரியைக் கட்டுப்படுத்துவதற்க்கென சங்குப்பிட்டி இறங்குதுறைக்கருகில் உள்ள நாகதேவன்துறையில் , ( ஞானிமடம் ) ஓரு கடற்படைத் தளத்தை அது அமைத்துக் கொண்டது. ” 50 கலிபர் ” துப்பாக்கியுடன் ” ராடர் ” கருவிகள் பொருத்தப்பட்ட நீருந்து விசைப்படகுகளைக் கடற்படையினர் கடல் ரோந்திற்கு பயன்படுத்தினர். 

உல்லாசப் பயணம் போவதுபோல , நாகதேவன்துறையிலிருந்து ஆனையிறவு இராணுவத்தளத்திற்கு , கடல்நீரேரி வழியாக அடிக்கடி கடற்படையினர் ரோந்துசென்றனர்.

இவ்விதம் பல விசைப்படகுகள் சேர்ந்து கடல்நீரேரியில் ரோந்து போகத் தொடங்கினர்.

இத்தகைய ரோந்துத் தொதரர் ஒன்றை 29.12.1991 அன்று தாக்கிய கடற்புலிகள் 09 கடற்படையினரைக் கொன்று , அவர்களது ஆயுதங்களையும் கைப்பற்றினர். இவ்வாறான தாக்குதல்கள் கடல்நீரேரியில் தொடர்ந்தன.

அதன்பின் ஆனையிறவுக்கான கடல்ரோந்து தடைப்பட்டது.
அதன்பின் , இரவு நேரங்களில் மக்களின் படகுப்பயணத்திற்கு பாதுகாப்பளித்து வந்த கடற்புலிகளின் விசைப்படகுகளுக்கும் சிங்களக் கடற்படையின் விசைப்படகுகளுக்கும் இடையே , நேரடிக் கடற்சண்டைகள் நடைபெறத் தொடங்கின. இந்தச் சண்டைகளில் கடற்புலி வீரர்கள் காட்டிய வீரமும் அபாரத்துணிச்சலும் சிங்களக் கடற்படையைக் கதிகலங்கச் செய்தன. 

இறுதியில் , 26..08.1993 அன்று நடந்த கடற்சண்டையும் , கரும்புலித் தாக்குதலும் கடல்நீரேரியில் சிங்களக் கடற்படையைத் தூரவிலகியிருக்கச் செய்துவிட்டது.

இவ்விதம் கிளாலிக் கடல்நீரேரி ஊடாக ஓரு போக்குவரத்துப் பாதையைத் திறந்த கடற்புலிகள் , சிங்களக் கடற்படையுடன் இடைவிடாது மோதி , வீரச்சாதனைகள் பல புரிந்து , இறுதியில் கடல்நீரேரியில் மேலாதிக்கம் பெற்றுவிட்டனர். இந்தவகையில் கிளாலிக் கடல்நீரேரியில் கடற்புலிகள் நிகழ்த்திய கடற்சண்டைகள் , எமது போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுக்கொள்ளும்.

கடற் சண்டைகளைப் பொறுத்தளவில் , கிளாலிக் கடல்நீரேரியைப் போன்று ஆழங்குறைந்த கடல்களில் நடைபெறும் படகுச் சண்டைகள் ஓரு பரிமாணத்திலும் , ஆழக்கடலில் நடைபெறும் கடற் சண்டைகள் இன்னொரு பரிமாணத்திலும் இருக்கும்.ஆழங்குறைந்த கடலில் அலைகள் குறைவாக இருக்கும். எனவே சாதாரண படகுகளையும் சண்டைப்படகாக பயன்படுத்த முடியும். அத்துடன் ” டோரா ” போன்ற சக்திவாய்ந்த பீரங்கி படகுகளை ஆழங் குறைந்த கடலில் ஓடமுடியாது. இவை கடற்புலிகளுக்குச் சாதகமான விடயங்கள். 

ஆனால் ஆழக்கடலில் பாரிய அலைகள் இருக்கும். அந்த அலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்குப் படகுகளும் பாரம்கூடியதாகவும் – பாரியதாகவும் – வலிமை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பொங்கும் அலைகளின் மத்தியிலும் குறிபிசகாது எதிரிப் படகுகளுடன் மோதமுடியும். இவ்விதமான பாரிய படகுகளைக் கொள்வனவு சேயும் வசதிகளோ தற்போது கடற்புலிகளிடம் இல்லை. இதற்க்கு நிறைந்த தொழிநுட்பத்துடன் பெருமளவில் பணமும் தேவை. ஆனாலும் ஆழக்கடளிலும் அதிரடித் தாக்குதல் செய்வதற்குரிய சக்தியுடனேயே கடற்புலிகள் உள்ளனர். அவ்விதம் பல அதிரடி நடவடிக்கைகளைச் செய்து , சிங்களக் கடற்படைக்கு கணிசமான இழப்புக்களையும் – இடைவிடாத தலையிடியையும் கொடுத்துவருகின்றனர்.

சிங்களக் கடற்படையைப் பொறுத்தளவில் , ஆலக்கடளிலும் கடற்புலிகள் ஆதிக்கம் பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம்தான் , தற்போது மேலோங்கியுள்ளது. ஆயினும் சிங்களக் கடற்படைக்குச் சவாலாக ஆழ்கடலில் நேரடிச் சண்டைகளில் ஈடுபடக்கொடிய அளவிற்கு கடற்புலிகளின் சக்தி பெருகினாலே போதும். அது போரின் போக்கையே தலைகீழாக மாற்றிவிடும் என்பது , இராணுவ ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.

இன்றைய நிலையில் , வடதமிழீழத்தில் உள்ள அனைத்துப் படைமுகாம்களின் பாதுகாப்பும் ( எல்லைப்புறத்தைத் தவிர ) சிங்களக் கடற்படையின் பலத்திலே தங்கியுள்ளது. கடற்படையின் உதவி இல்லாமல் வடதமிழீழத்தின் படைமுகாம்களைப் பராமரிப்பது என்பது , சிங்கள அரசுக்கு இயலாத ஒன்று. படைமுகாம்களுக்குத் தேவையான உணவு , ஆயுதத்தள பாடங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களும் கடற்படைமூலமே விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் படைமுகாம்கள் புலிகளால் தாக்கப்படும் போதும் கடல் வழியே தான் சிங்களப் படைகளுக்கு உதவிகள் வந்துசேருகின்றன.

இந்த விநியோகங்களுக்கும் – உதவிகளுக்கும் ஒருவிளைவிக்கக் கூடிய அளவிற்கு , கடற்புலியாளின் நடவடிக்கைகள் ஆழக்கடலில் தொடர்ச்சியாக் அமையுமாயின் , கடலோரப் படை முகாம்களில் சிலவற்றை அகற்றவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசுக்கு எழலாம்.

பருத்தித்துறைப் பெருங்கடலில் 29.08.1993 அன்று ” டோறா ” சண்டைப்படகு மூழ்கடிக்கப்பட்டதன் பின் , இந்த அச்சம் சிங்களப் படைத்துறையினரின் மத்தியில் எழுந்துள்ளது. கடற் கரும்புலிகளின் பாய்ச்சலுக்கு சிங்களக் கடற்படையின் பாரிய கப்பல்களும் உள்ளாகலாம் என்ற பயம் , சிங்களக் கடற்படையையும் ஆட்கொண்டுவிட்டது.

அத்துடன் கடற்படையிடம் இருக்கும் ஒவ்வொரு சண்டைப்படகும் பலகோடி ரூபா பெறுமானமுள்ளது. பருத்தித்துறைக் கடலில் மூழ்கடிக்க்கப்பட்ட ” டோறா ” சண்டைப்படகின் பெறுமதி 30 கோடி ரூபா என , சிங்கள தேசத்துப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

இவ்விதமாக பெருங்கடலிலும் சிங்களக் கடற்படை தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து , தனது கடலாதிக்கத்தை இலக்குமாக இருந்தால் , படைமுகாம்களுக்கான விநியோகங்களை கடற்படை முழுஅளவில் செய்யமுடியாது போக வாய்ப்புண்டு. இந்தப் பொறுப்பை சிறீலங்காவின் வான்படையால் பிரதியீடு செய்யமுடியாது. எனவே படைமுகாம்களில் ஆட்குறைப்புச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் படைத்துறைத் தலைமைக்கு ஏற்ப்படலாம். இதன் பொருள் , ஒன்றில் படைமுகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அல்லது சிங்களப் படைகள் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் நிலப்பகுதியிலிருந்து கணிசமான பகுதியைவிட்டு பின்வாங்கவேண்டியிருக்கும்.

‘ சமிந்ர பெர்னாண்டோ ‘ என்ற சிங்கள விமர்சகர் , 05.09.1993 ‘ ஐலண்ட் ‘ வார இதழில் இப்படி எழுதியிருக்கிறார் :

”விநியோக வசதிகளுக்காகக் கடற்படையையே நம்பியிருக்கும் கரையோர இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தும் வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது தான் , கடற்புலிகளின் செயற்பாடுகளின் பிரதான இலக்காக இருக்கின்றது. தொடர்ச்சியான முறையில் கடற்படைமீது அழிவுகளை ஏற்படுத்தினால் , கரையோர இராணுவ முகாம்களை அகற்றுவதைத் தவிர அரசுக்கு மாற்றுவழி இல்லாதுபோகும் என , புலிகளின் தலைமை நம்புகின்றது. ”

தமிழீழக் கடலிலே கடற்புலிகள் மேலாதிக்கம் பெற்றால் அது கரையோரச் சிங்களப்படைமுகாம்களுக்கு சாவுமணி அடிக்கும். அதனால் கணிசமான பகுதி நிலமும் சிங்களப் படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுவிடும். அத்துடன் சிங்கள அரசு தமிழீழ மக்கள் மீது திணித்துள்ள சகலவிதமான பொருளாதாரத் தடைகளையும் – மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் தடைகளையும் – பிசுபிசுக்கச்செய்துவிடும்.

இந்தப் பொற்காலத்தை தமிழீழ மக்களின் கைகளுக்கு விரைவாகக் கிடைக்கச்செய்யும் இலட்சியத்தோடு , கடற் கரும்புலிகளின் துணையுடன் கடற்புலிகள் அயராது பாடுபடுவர்.

கடலிலே காவியம் படைப்போம்.

– விடுதலைப்புலிகள் இதழ்
« PREV
NEXT »

No comments