ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் சுயாதீன ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தனது சாட்சியங்களை பதிவுசெய்துள்ளார்.
ஜெனீவா ஐ.நா சபையில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற சாட்சியங்களை பதிவுசெய்யும் போது மேற்படி விவசாயி ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தனது சாட்சியத்தையும் பதிவுசெய்தார்.
மொனாரகல வெல்லோய பகுதியில்2007-04-06 திகதிஅன்று இராணுவப்புலனாய்வு பிரிவு மற்றும் கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டு வெலிகந்தை காட்டுப்பகுதியில் வைத்து மூன்று மாதங்கள் கடுமையான சித்திரவைதைகுட்பாடுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த காலப்பகுதியில் இராணுவம் பொலிஸ் பாதுகாப்புடன் கருணா குழு இயங்கியதாகவும் விடுலைபுலிகள் சந்தேக நபர்களை கருணா குழு அங்குவைத்து படுகொலைசெய்து புதைத்தாககவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலைகளை கருணாகுழு மேற்கொண்டதாகவும் தனது சாட்சியத்தில் பதிவுசெய்தார்.
பின்னர் பெரும் தொகை பணத்தை பெற்றபின்னர் தான் விடுவிக்கப்பட்டதாகவும் செல்வதீபன் சாட்சியம்அளித்தார்.
2008ஆம் ஆண்டு தனது சகோதரன் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு இன்றுவரை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக தனது குடுப்பத்துக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தனது சகோதரனை விடுவித்துதருமாறும் அத்துடன் சிறையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் தமது சமூகத்துடன் இணைந்து வாழ ஏற்றவகையில் விடுவிக்கபடவேண்டும் எனவும்
இந்த நூற்றண்டில் மோசமான அழிவுக்குட்பட்ட எமது மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்றால் அது சர்வதேச நீதி விசாரணையால் மட்டுமே முடியும் எனவே உலகமக்களினால் நீதியின் சின்னம் என கருதப்படும் ஐநா சபை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும், அரசியல் இல்லாத நீதிவிசராணை வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டமக்களுக்கு நீதி கிடைக்காமல் எந்த விதமான நல்லிணக்கத்தையும் ஏற்பாடுத்தமுடியாது எனவும் அவர் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார்.
No comments
Post a Comment