தமிழர்களை கொன்று குவித்த இலங்கை உள்நாட்டுப் போரில் பணியாற்றிய ராணுவத்தினரை இலங்கை ஜனாதிபதி கெளரவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை ராணுவம் புரிந்தது போர்க்குற்றம் என்றால், அந்நாட்டு ராணுவத்தினரும் போர்க்குற்றவாளிகள் தாம் என்று பொருள்.
அத்தகைய குற்றங்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள், தண்டனை பெற வேண்டியவர்களை அழைத்து பாராட்டும் விதமாக இலங்கை அரசு நடந்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
லட்சக்கணக்கில் குடும்ப உறவுகளை இழந்து நிற்கும் தமிழினத்திற்கு ஆறுதலும், நிவாரணமும், சம உரிமையும் தரவேண்டிய இலங்கை அரசின் இத்தகைய செயல், ஒட்டுமொத்த தமிழினத்தின் இதயங்களில் மேலும் காயங்களை ஏற்படுத்தி அதில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
ராணுவத்தினரைக் கெளரவித்ததன் மூலம் தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கும் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசும் தமிழர் உணர்வுகளை புரிந்துகொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment