Latest News

October 10, 2015

யாழில் நெல் விளைச்சலை அதிகப்படுத்த நடவடிக்கை
by admin - 0

யாழ். மாவட்டத்தில் உவர்த் தன்மை உள்ள வயல் நிலங்களில் நெல் விளைச்சலை மேம்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.  வயல் நிலங்களுக்கு கருக்கிய உமிகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக 18 இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

அடுத்த வருடம் இந்த நடைமுறை மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. இவ்வாறு யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இந்த வருடம் 11 ஆயிரத்து 900 யஹக்ரேயர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விவசாயத் திணைக்களம் உத்தேச இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. அத்துடன் விவசாயிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட விதை நெல்லை விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் மூலம் நியாய விலைக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் வயல் நிலங்களில் உவர்த்தன்மை காணப்படு வதால் உரிய விளைச்சல் கிடைக்காமற் போவதோடு மழை குறைவான காலப்பகுதியில் நெற்பயிர் கருகி அழிந்து போவதும் உண்டு. 

இந்த வகையில் கணிசமான அளவு விவசாயிகள் பாதிப்படைவதால் உவர்த்தன்மை கொண்ட வயல் நிலங்களுக்கு நெல் உமியை கருக்கிப் பயன்படுத்துவது உவர்த்தன்மையைக் குறைப்பதோடு நெற்பயிர் வளர்ந்து நல்ல விளைச்சலையும் தரும் என விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் ஆர்வம் உள்ள விவசாயிகள் மூலம் கருக்கிய உமியை வயல்நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் உமியைக் கருக்குவதற்கு 18 இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கருக்கிய உமிப்பிரயோகம் தொடர் பாக யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்ததாவது:

யாழ்.மாவட்டத்தில் உவர்த் தன்மை உள்ள வயல்களில் நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைவது பரவலாகக் காணப்படுகின்றது. வயல் நிலங்களில் கருக்கிய நெல் உமியை பயன்படுத்துவது உவருக்கு எதிராக நெற்பயிர்களை வளரச் செய்யும். எதிர்காலத்தில் இந்த நடைமுறை மேலும் விஸ்தரிக்கப்படும் என்றார்
« PREV
NEXT »

No comments