Latest News

October 10, 2015

யாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் வீட்டில் திருட்டு
by admin - 0


யாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் தாய், தந்தை இருபெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் வசித்து வந்த வீட்டிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி மூன்று பெண் பிள்ளைகளும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அவர்களது பெற்றோரும் வெளியில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாலை அனைவரும் வீடு திரும்பிய போதும் குறித்த விடயம் தொடர்பில் அவதானித்திருக்கவில்லை எனவும் பின்னர் நேற்று இரவு அலுமாரியை திறந்த போதே விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் குறித்த வீட்டில் கொள்ளை நடந்தமைக்கான எந்த அடையாளமும் இல்லை என தெரியவருகின்றது.

அதாவது வீட்டின் கதவு மற்றும் அலுமாரி சேதப்படுத்தப்படாமல் கொள்ளை இடம்பெற்றதாக தெரியவருகின்றது
« PREV
NEXT »

No comments