இந்தியாவில் திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் எட்டு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிவித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1ம் திகதி முதல் இந்த இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் மஹாத்மா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பிலான வழக்குகளின் அடிப்படையில் இவர்கள் விசேட முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினரால் தெரிவிக்கப்பட்டது .
No comments
Post a Comment