முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்திற்கு இன்று பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment