Latest News

October 16, 2015

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
by admin - 0

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலைலை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


இதன் போது புதிய அரசின் நல்லாட்சித் தத்துவம் நாட்டில் தொடர வேண்டுமாயின் இந்த அரசாங்கம் முதற்கட்ட நடவடிக்கையாக தம்முடைய உறவுகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அரசியற் கைதிகளின் உறவுகள்; கண்ணீர் மல்ககக் கதறியழுது கோரிக்கை விடுத்தனர்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு ஆரகாமையிலுள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்hபாக நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராடடம் பல்வேறு கட்சிகள் மற்றுமு; பொது அமைப்புக்களின் ஆதரவுடன் மாலை வரை நடைபெற்றது.


இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தில் அரசியற் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களிற்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களிலும் கொழும்பிலும் பேராட்டங்கள் இடம்பெற்றுள்ள அதே வேளையில் தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்குள்ள பல அரசியற் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதற்கமைய யாழ்ப்பாணத்திற் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு கட்சிகளினாலும் பொத அமைப்புக்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந் நிலையிலையே நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த வேளையில் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதன் போது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே, அரசே தமிழர்களுக்கு ஒரு நீதி சிஙகளவர்களுக்கு ஒரு நீதியா? ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு? ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே? சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா? இனியும் இழுத்தடிக்காது கைதிகளை விடுவிக்க வேண்டும். ஊள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இந்தப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் மாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெருமளவிலான அரசியற் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்





« PREV
NEXT »

No comments