Latest News

October 13, 2015

தன் இனம் அழிக்கும் கோடரிப் பிடிகள்
by admin - 0

இரண்டு பெரிய மரங்கள் தமக்குள் பேசிக் கொண்டன. ஆகா! எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது. எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாங்கள் மிகுந்த மகிழ்வாக தொடர்ந்தும் இருக்கலாம். இப்படியாக அந்த மரங்கள் பேசி  சில  மணி நேரமானதும் ஒருவன் கோடரியுடன் அங்கே வருகிறான்.
தான் கொண்டு வந்த கோடரியை ஒரு மரத்தில் சரித்து வைத்துவிட்டு மரம் வெட்டுவதற்காகத் தன்னை ஆயத்தம் செய்கிறான்.

அப்போது அந்த மரங்கள் மீண்டும் பேசிக் கொண்டன. இன்னும் சில மணி நேரத்தில் எங்கள் உயிர்கள் பறிபட்டுப் போகும். அதோ கோடரி! அதற்குத் துணை கோடரிப்பிடி .என்ன செய்வது? எம் இனம்தான் எங்க ளுக்கு எதிரி. தானும் அழிந்து எங்களையும் அழிக்கி ன்ற இந்தக் கொடுமை என்றுதான் தீருமோ? இப்படி அந்த மரங்கள் பேசிக்கொள்ளவும் மரம்வெட்டி அவற்றைத் தறிக்கவும் சரியாக இருந்தது.
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புபடுத்தி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் கைது என்பது சாதாரணமானது அன்று. அதற்குள் ஒரு பெரும் செய்தி உள்ளது. அதாவது இலங்கையில் சட்டம், நீதி ஒழுங்காக இருக்கிறது. அதனை நாட்டின் புதிய அரசாங்கம் சரியாக அமுல்படுத்தி வருகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் நடவ டிக்கை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கையில் ஒரு கட்டமே கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் கைதாகும் என்ற அறிவிப்பு சர்வதேசத்துக்கு ஏவப்படும்.
அதேநேரம் தமிழர்களைக் கொன்ற பெரும்பான் மையினரை காப்பாற்றுவதற்கு உள்ளகப் பொறிமுறை போதுமானது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்­ஷ வை விசாரிப்பது என்றாலும் அவருக்குரிய கெளரவம் தாராளமாக வழங்கப்படும். கோத்தபாய ராஜபக்­ஷ வை கைது செய்து விசாரித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் பிள்ளையானின் கைது என்பது விலங்கிட்டதாக இருப்பதைப் பார்க்கும் போது, ஜோசப் பரராஜ சிங்கத்தின் கொலை என்பதற்கப்பால், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சிங்களவர்களுக்கு நீங்கள் செய்தவற்றுக்கு இப்படித்தான் தண்டனை வழங்கப்படும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகவும் பிள் ளையானின் கைதைப் பார்க்கமுடியும்.

எதுவாயினும் போர்க்குற்ற விசாரணை என்பது படைத்தரப்பை பாதுகாப்பதாகவும் முன்னாள் விடுத லைப்புலி உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குவ துமாகவே இருக்கப் போவது தெரிகிறது.
ஆக, போர்க்குற்ற விசாரணை படையினருக்கு பொது மன்னிப்பாகவும் முன்னாள் போராளிகளுக்கு கடூழிய சிறைத் தண்டைனைகளாகவும் அமையும்.
அதற்கான ஏற்பாடுகளையே கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையும் கனகச்சிதமாக செய்து முடித் துள்ளது.

சர்வதேச விசாரணை வேண்டாம் என்று மறுதலித்த இலங்கை அரசு, போர்க்குற்றம் என்றால் புலிகள் செய்தவையும் அடங்கும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருக்கும். அதேநேரம் விடுதலைப்புலிகள் அமை ப்பை வேரோடு அழிப்பதற்கு புலிகள் அமைப்பில் இருந்த கோடரிப்பிடிகளை தமக்குச் சாதகமாக்கிய இலங்கை ஆட்சியாளர்கள் இப்போது உக்கிப்போன கோடரிப் பிடிகளை விறகாக்கி எரிமூட்ட ஆயத்தமாகி விட்டனர். 
« PREV
NEXT »

No comments