Latest News

October 13, 2015

அஜித் ரசிகருக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு!
by admin - 0

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வேதாளம்’. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுது. மேலும், இந்த டீசர் இணையதளங்களில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது.



இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 16-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துயிருந்தனர். இப்படத்தில் இசையமைத்து இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் அன்று “வேதாளம்” படத்தின் பாடல்களை வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அனிருத் தன் பிறந்தநாளுக்கு கிடைத்த பரிசாக கொண்டாடி வருகிறார். 

இந்த படத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கால் டாக்சி டிரைவர் கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு படத்தை திரயிட உள்ளனர்.


« PREV
NEXT »

No comments