தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி, யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னதுரை தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண சபை உறுப்பினர்களான பரம்சோதி, சுகிர்தன், கஜதீபன் உள்ளிட்டோர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி நேற்றுமுதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment