Latest News

October 13, 2015

முல்லைத்தீவில் காடழிப்பு தொடர்பில் பார்வையிடச் சென்ற கூட்டமைப்பினருக்கு அச்சுறுத்தல்
by Unknown - 0

முல்லைத்தீவு பகுதியில் அனுமதி பெறப்படாது காடழித்து மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதியை பார்வையிடச் சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினருக்கு அங்கு குழுமிய முஸ்லிம் மக்களால் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு, கொத்தம்பியாகும்பம் பகுதியில் தேக்கமரக் காட்டினை அழித்து மீள்குடியேற்றம் என்ற போர்வையில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் மக்கள் குடியேறி வருகின்றனர்.

அரச அதிபருக்கு கூட தெரியாத நிலையில் இடம்பெற்றுவரும் இந்த குடியேற்றம் தொடர்பிலும், காடழிப்பு தொடர்பிலும் பார்வையிடுவதற்கு நேற்றைய தினம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் சென்றனர்.

அங்குள்ள நிலமைகளை அவர்கள் அவதானித்த போது அங்கு குடியேறியிருந்த முஸ்லிம்' மக்கள் சிலர் ஒன்று கூடி குறித்த உறுப்பினர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களை இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் தெரியப்படுத்தியதாக தெரிவித்து, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டனர்.

இதனால் நிலமை சிக்கலடைவதை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்பாதுகாவலர்கள் பாராளுமன்ற உறுப்பினர் இருவரையும், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டனர்.

இதன்பின், அத்துமீறிய குடியேற்றம் மற்றும் காடழிப்பு தொடர்பில் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் நேரடியாக சென்று முறையிட்டனர்.


« PREV
NEXT »

No comments