யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இரண்டு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு -
இது முன்னர் சிங்களப்படையின் உயர் பாதுகப்பு வலையமாகும்
யாழ் அரியாலை முள்ளிப்பகுதியில் மண் அகழ்ந்து கொண்டிருந்தவர்களால் இரு மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெண்கள் அணியும் ஆடைகள், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது மேற்படி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடும் சிலர் குறித்த எலும்பு கூடுகளை கண்டெடுத்த போதும் அவை பற்றி வெளியில் சொல்லாதிருந்த நிலையில் குறித்த பகுதியில் முயல் பிடிக்கச் சென்றிருந்த ஒருவர் விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பெண் பிள்ளை ஒன்றின் எலும்பு கூடு மற்றும் ஓரு கான்டபாக், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் கைப்பை, பென்சில், குடை, இரு விதமான செருப்பு, குடை ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் இரு பெண்களின் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்ப்படுகின்றது.
மேலும் மீட்கப்பட்ட எலும்பு கூட்டின் மண்டை ஓட்டில் சூட்டு காயம் ஒன்றும் காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த சடலங்கள் புதைக்கப்பட்டது போர்க்காலத்திலாக இருக்கலாம் எனவும், இந்தப்பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக போர்காலத்தில் திகழ்ந்த்து என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment