Latest News

October 14, 2015

மகிந்த மகன் யோஷிதவை விரைவில் கைது செய்ய நடவடிக்கை
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச தொடர்பில் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரியல் அட்மிரல் டீ.டப்ல்யூ.பீ.வெல்வத்த தலைமையிலான குழு, மேற்கொண்ட விசாரணைகளில் யோஷித்த ராஜபக்ச தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளது. 

கடற்படை கேடட் உத்தியோகத்தர்கள் இணைத்து கொள்வதற்கான 45 பேர் கொண்ட குழுவுக்காக பிரசூரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, 

ஒரே முறையில் சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் சிங்களம் உட்பட 6 பாடங்களிலும் உயர்தர பரீட்சையில் 2 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

எப்படியிருப்பினும் கடற்படை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச சாதாரண தரத்தில் சிங்கள பாடம் மாத்திரம் சித்தியடைந்துள்ளதாகவும், உயர்தரத்தில் குறித்த தகுதிகளும் இல்லை என தெரியவந்துள்ளது. 

இவ்வாறான நிலையில் கடற்படையில் அவர் எவ்வாறு இணைத்துகொள்ளப்பட்டார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

அதற்கமைய 2003/2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சாதாரணதர பரீட்சை முடிவுகளுக்கு மாத்திரம் அதிகாரிகளை இணைத்து கொள்வதற்கு கடற்படையினால் எவ்வித தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என விசாரணை செய்யப்பட்டது. எனினும் அங்கு அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில் அவர் கேடட் உத்தியோகத்தர் பயிற்சி பெற்று கொள்ளும் போது மூத்த கடற்படை அதிகாரிகள் மூவருக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது கடற்படை சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, கடற்படையின் சிறந்த பயிற்சி கேடட் அதிகாரியாக யோஷித்த ராஜபக்சவுக்கு விருது வழங்குவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அத்துடன் பிரித்தானிய அரச கடற்படையினால் பயிற்சி ஒன்றுக்காக கடற்படையினரால் யோஷித ராஜபக்சவை அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி போலியானதெனவும், அது அவரினால் கட்டணம் செலுத்தப்பட்டு வெளியாகிய செய்தி என தகவல் வெளியாகியுள்ளது. 

பின்னர் பிரித்தானிய ஹெம்ஷயரிலும் உக்ரைனிலும் விசேட பயிற்சி யோஷித ராஜபக்சவினால் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது. 

இதன் போது உக்ரைன் பயிற்சிக்காக அக் காலக்கட்டத்தின் தூதுவரான உதயங்க வீரதுங்க முன் நின்று செயற்பட்டுள்ளதுடன் குறித்த பயிற்சிகளுக்கான பணத்தினை யோஷித்த ராஜபக்சவுக்கு செலுத்துமாறு கடற்படைக்கு கோத்தபாய ராஜபக்சவினால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பயிற்சியின் பின்னர் சிறந்த கடற்டை அதிகாரிக்கு வழங்கப்படும் விருது யோஷித்த ராஜபக்சவுக்கு முன்னாள் இராணுவ தளபதி வசந்த கரன்னாகொடவின் உத்தரவுக்கமைய வழங்கப்பட்டுள்ளது. 

அதற்காக யோஷித்த ராஜபக்ச எந்த விதத்திலும் தகுதியானவர் அல்ல எனவும் இதன் ஊடாக பயிற்சி பெற்ற ஏனைய அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை யோஷித ராஜபக்சவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக அவசியமான சந்தர்ப்பங்களில் அலரி மாளிகைக்கு செல்லவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக விசேட அடையாள அட்டைகளும் அவருக்காக அச்சிடப்பட்டுள்ளது. 

இந்த தகவல்களை ஆராய்ந்து விசேட நடவடிக்கையாக யோஷித்த ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

« PREV
NEXT »

No comments