Latest News

October 14, 2015

டிரான் தப்பிப்பின் பின்னணியில் ரோஹினி
by admin - 0

RADA நிறுவன தலைவர் டிரான் அலஸ், பல தடவைகள் கைது செய்யப்பட சந்தர்ப்பம் இருந்தபோதும் கைது செய்யாமல் தவிர்த்த விதம் குறித்து தற்போது உயர் நீதிமன்றில் பணியாற்றிவரும் நீதிபதி 'லங்கா நியூஸ் வெப்' இணையத்திற்கு தகவல்கள் பலவற்றை வழங்கியுள்ளார்.

அவரது தகவல்படி, டிரான் அலஸை கைது செய்யாதிருக்க கே.ஶ்ரீபவனுக்கு அழுத்தம் கொடுத்தது உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க என தெரியவந்துள்ளது. ரோஹினியும் ஈரா வனசுந்தரவும் இணைந்து பிரதம நீதியரசரை ஏமாற்றியுள்ளனர்.

டிரானை கைது செய்யாது இருக்கும் மூன்று பக்க அறிக்கையை கே.ஶ்ரீபவன் விடுத்தது ரோஹினி-ஈராவின் அழுத்தத்தின் பின்னரே என தெரியவந்துள்ளது. இதற்கென இவ்விருவரும் பிரதம நீதியரசருக்கு Code of conduct வும் வழங்கியுள்ளனர்.

வழங்கு தொடர்பில் ஆலோசனை பெற சிரேஸ்ட சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் வழிகாட்டலில் டிரான் கருத்து பெறவென (Opinion) சிரேஸ்ட பேராசிரியர் லக்ஷமன் மாரசிங்கவை சந்தித்துள்ளார். லக்ஷமனின் மனைவி ரோஹினி மூலம் ஈராவையும் டிரான் தன்வசப்படுத்தியுள்ளார். லக்ஷமன் மாரசிங்கவிற்கு டிரான் 10 மில்லியனுக்கு அதிகம் பணம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அது ரோஹினி-ஈவா ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

'ஶ்ரீபவன் லஞ்சம் வாங்கியதாக நான் சொல்லவில்லை. அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ஆனால் இரு அம்மனிகள் குறித்து சந்தேகம் உள்ளது. ஈவா இமோசனல் பெண்ணாக இருந்தாலும் ரோஹினி உலகத்தையே உண்டு தண்ணீர் குடித்தவள். ராடா நிறுவனத்தின் அனைவரும் சிறையில் இருக்க அதன் தலைவர் டிரான் மற்றும் வௌியில் இருப்பது எப்படி?' என்று உயர் நீதிமன்ற சிரேஸ்ட நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது. டிரானின் வழக்கு பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவனின் நீதித்துறை வாழ்க்கையில் கறுப்பு புள்ளியாகும் என்று அந்த நீதிபதி கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments