Latest News

October 16, 2015

லொறியில் மறைந்­தி­ருந்து பிரித்­தா­னி­யா­வுக்குள் பிர­வே­சிக்க முயற்­சித்த குடி­யேற்­ற­வா­சி­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்த கரடி
by admin - 0

பிரித்­தா­னி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக பிர­வே­சிக்கும் முக­மாக லொறி­யொன்றின் பின் பக்­கத்தில் அத்­து­மீறி ஏற முயன்ற குடி­யேற்­ற­வா­சிகள், அங்கு கூண்டில் அடைக்­கப்­பட்ட நிலையில் அபா­ய­க­ர மான கர­டி­யொன்று இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ ளது.

செவ்வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா ­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
மேற்­படி கர­டி­யா­னது அந்த லொறியில் ரஷ்­யா­வி­லி­ருந்து பிரித்­தா­னிய யோர்க் ஷிய­ரி­லுள்ள மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

காலெ­யிஸில் முகா­மிட்­டுள்ள குடி­யேற்ற­ வா­சிகள் அவ்­வ­ழி­யாகச் செல்லும் வாக­னங் களை தடுத்து நிறுத்தி அவற்றில் ஏறி பிரித்­தா­னியா உள்­ள­டங்­க­லான ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு செல்ல முயற்­சிப்­பது வழ­மை­யா­க­வுள்­ளது.
இந்­நி­லையில் சம்­பவதினம் நிஸான் என்ற மேற்­படி 22 மாத வய­தான கர­டி­யுடன் பய­ணித்த குறிப்­பிட்ட லொறியை குடி­யேற்­ற­வா­சிகள் குழு­வொன்று வழி­ம­றிக்க ஏனைய குடி­யேற்­ற­வா­சிகள் அந்த லொறியின் பின்­பக்­கத்தில் அ­வ­ச­ர­மாக ஏறும் நட­வ­டிக்­கை யில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது அந்த லொறி­யினுள் இராட்­சத கர­டி­யொன்று இருப்­பதைக் கண்டு குடி­யேற்­ற­வா­சிகள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

இந்­நி­லையில் அந்த லொறியில் ஏறிய 7 குடி­யேற்­ற­வா­சி­களில் நால்வர் அச்சம் கார­ண­மாக லொறியில் ஏறிய வேகத்தில் அதி­லி­ருந்து குதித்­துள்­ளனர். ஆனால் ஏனைய 3 குடி­யேற்­ற­வா­சிகள் அந்த லொறியில் பய­ணத்தைத் தொடர்ந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் மேற்­படி குடி­யேற்­ற­வாசி­களின் செயற்­பாட்டை அவ­தா­னித்த பிராந்­திய உத்­தி­யோ­கத்­தர்கள் அந்த லொறியைப் பின்­தொ­டர்ந்து சென்று லொறியின் சார­திக்கு குடியேற்றவாசிகள் பயணிப்பது தொடர்பில் எச்சரிக்கை செய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பாக பொலிஸாருக் கும் அறிவிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments