Latest News

September 01, 2015

ஜப்பான் தூதுவருடனான சந்திப்பின் போது போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்திய அமைச்சர் சத்தியலிங்கம்
by Unknown - 0

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போதும் அதற்கு முன்பும் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் 3 ஐ (3I) முறைமையே நம்பகத்தன்மையுடையதாக இருக்குமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கைக்கான அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஜப்பானிய தூதுவர் மறிக்கோ ஜமமோட்டோ(Marikko Jamamota) உடனான சந்திப்பின் போதே அமைச்சர் சத்தியலிங்கம் மேற்படி விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அதாவது International independent Inquiry (3 ஐ) எனப்படும் சர்வதேச சுயாதீன விசாரணையே பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்தும். 

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். இதற்கு பல கசப்பான கடந்தகால அனுபவங்கள் உள்ளது. குற்றமிழைத்தவர்களை குற்றம் இழைக்கத் தூண்டியவர்களே விசாரிப்பது எந்த வகையில் நியாயமானதாக இருக்குமென கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து சந்திப்பில் கலந்துகொண்டு உரையாடிய விடயங்களாக, போரிற்கு பின்னரான சூழ்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளார்கள். இதன்மூலம் கொடியபோரின் பாதிப்பை அனுபவித்த மக்கள் மாகாணசபை மூலம் விமோசனம் கிடைக்குமென நம்பினார்கள். எனினும் மாகாணசபைக்கான அதிகாரங்கள் வழங்கப்படாதுள்ள நிலையில் மக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளார்கள். இதனால் எதிர்காலத்தில் மக்கள் ஜனநாயக அரசியலில் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகக்கூடுமென தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, உள்ளக வீதி அபிவிருத்தி, பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஜப்பானிய அரசு உதவிகளை வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
« PREV
NEXT »

No comments