Latest News

September 01, 2015

96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம்
by Unknown - 0

அரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.

பரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த புரட்சிகர துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெறும் விழாவில் உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்.

கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக நிபுணர்கள் குழுவினர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments