Latest News

September 21, 2015

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மகிந்த தரப்பு தீர்மானம்
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவராக ஏற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றில் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக தற்காலிக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கைப்பற்றும் தமது முயற்சியை கைவிட்டதாக அர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 36 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 உறுப்பிர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.வலுவான எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யுடன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த திட்டத்திற்கு ஜே.வி.பி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments