Latest News

September 21, 2015

நாகர் கோவிலில் படுகொலையான மாணவர்களின் நினைவுத்தூபி முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது
by Unknown - 0

நாகர் கோவிலில் படுகொலையான மாணவர்களின் நினைவுத்தூபி முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

விமான குண்டு வீச்சில் படுகொலையான மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை இராணுவத்தினரின் புக்கார விமானம் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது. அந்த தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள்.

அன்றைய தினம் படுகொலையான மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது அத்துடன் படுகொலையான மாணவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றும்  நிறுவப்பட்டுள்ளது.

குறித்த நினைவுத்தூபியினை நாளைய தினம் பி.ப. 3.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து வைக்கவுள்ளார்.
« PREV
NEXT »

No comments