Latest News

September 22, 2015

வன்புணர்வு, படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவ சேயாசதெவ்மியின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து யாழிலும் போராட்டம்
by admin - 0

தென்னிலங்கையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவ சேயாசதெவ்மியின் கொலைச் சம்பவத்தைக்; கண்டித்து யாழிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணை அறிக்கை இனச் சுத்திகரிப்பு விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை – ஐ.நா          |           விவசாயி -TamilNews

இத்தகைய சம்பவங்களை ஆட்சிக்கு வந்திருக்கின்ற அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இதுவே இறுதியான சம்பவமாக அமைய வேண்டுமேன்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட நுழைவாயில் முன்பாக  அனைத்து மாணவர்களும் இணைந்து ஒரு மணி நேரம் மணிநேரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும், குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் மற்றும் சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகைளத் தாங்கியவாறு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதே வேளை யாழ் அளவெட்டி பகுதி இளைஞர்கள் குறித்த சிறுமியின் கொலைக்கு நீதி கோரி யாழ் அளவெட்டியில் இருந்து பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பிக் கொண்டு யாழ் தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலகரிடம்; மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் விரைவாக விசாரணை செய் கடுமையான தண்டனை கொடு,சிறுமியின் மிருகத்தனமான கொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்,சேயாசதவ்மியின் வன்முறையே கடைசியாக இருக்கட்டும் போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

இப் பேரணியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட பல தரப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்.









« PREV
NEXT »

No comments