Latest News

September 22, 2015

ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் இலங்கை அரசிற்குச் சார்பான எந்தவித திருத்தங்கள் மாற்றங்ளோ இன்றி; அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும் - கூட்டமைப்பு
by admin - 0

ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் இலங்கை அரசிற்குச் சார்பான எந்தவித திருத்தங்கள் மாற்றங்ளோ இன்றி; அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும் - கூட்டமைப்பு
ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் இலங்கை அரசிற்குச் சார்பான எந்தவித திருத்தங்களேர் அல்லது மாற்றங்ளோ இன்றி அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ர தலைவர்களில் ஒருவரும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மற்றுமு; கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறுகின்ற மனத உரிமைகள் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்னொழியப்பட்ட பரிந்துரைகளை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அதே வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனை வரவற்கும் நிலையில் இதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு துடிக்கின்றது.

இருந்த போதும் இலங்கை அரசிற்கு சாதகமான வகையிலான எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ள கூடாதென்றும் இதில் திருத்தங்களை மேற்வதனை தாம் எதிர்ப்பதாகவும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடப் போவதாகவும்; தெரிவித்துள்ளார்.

யாழ் நகரிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களைச் சந்தித்து ஐ.நா.அறி;க்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த மாவை சேனாதிராசா மேலும் தெரிவிக்கையில்..
கடந்த 16 ஆம் திகதி மனித உரிமை ஆணையாளரினால் ஓர் அறிக்கையனொற்று மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாம் ஏற்கனவே குறிப்பி;டது போன்றதான சிபார்சுகள் பரிந்துரைகள் உள்ளக்கப்பட்டிருக்கின்றன. நம்பத் தன்மை வாய்ந்த நற்பெயர் கொண்ட நீதிபதிகள் சமூக தலைவர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்தவர்களை உள்ளடக்கியதாக இந்த விசாரணை அமைகின்றது.
மார்ச் மாதம் வரைக்கும் தாங்கள் சேகரித்த அறிக்கைகள் தொடர்பிலான பொறி முறைதான் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிக்கைய வரவேற்கின்றோம். இதற்கேற்ற வகையில் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும். இதற்கமையவே விசாரணையை நடத்துவது மிக முக்கியமானதாகும்.
இங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ஙற  குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உண்மைகள் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிதி கிடைக்க வேண்டும். இதற்கமையவே பரிந்துரைகளில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இலங்கை அரசர்ஙகமானது அறக்கையின் அடிப்படையில் செயற்படுவதற்கு தாயராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனினும் அரச தரப்பிலிருக்கின்ற சிலர் இதற்கு ஆதரவையும் சிலர் எதிர்ப்ரபையும் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு; உள்ளக விசாரணையை நடத்தப் போவதாகவும் கூறுகின்றனர்.

இருந்த போதும் வெளிவந்திருக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில் விசாரணைகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளுமென்றும் எதிர்பார்க்கின்றோம். இந்த நேரத்தில் இலங்கையின் வெளிவகார அமைச்சு அந்தப் பரிந்துரைகளை தாங்கள் ஏற்று விசாரணை நடத்துவதாகவும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டின் அடிப்படையில் உள்ளக விசாரணையொன்றை நடத்துவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

ஆயினும் இந்த  வியடத்தி;ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தெட்டத்தெளிவாக தெரிவித்து வந்திருக்கின்றது. அதாவது இல்ஙகை அரசு நடத்துகின்ற எந்தவித உள்ளக விசாரணையிலும் நம்பிக்கையில்லை. அப்படியான விசாரணையை நாம் எதிர்க்கின்றோம் இதனையே தொடர்ச்சியாக கூறியுள்ளோம்.

இந்த அடிப்படையில் தான் எமது தாயக மற்றும் புலம் பெயர் மக்கள் சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கோரி பேராட்டங்களை நடத்துகின்றனர். இதன நாமும் வரவேற்று ஆதரிக்கின்றோம். இதே வேளையில் அமெரிக்கா அரசானது மனித உரிமைப் பேரவை நிபுணர்கள் ஏனைய நாடுகளோடு இணைந்து சர்வதேச விசாரணை தொட்ர்பில் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற பரிந்துரைகளோடு அதன் பிண்ணனியிலெயே புதிய பிரேரணையொன்றையும் கொண்டு வரவிருக்கின்றதாக அறிகின்றோம்.

ஆகவே இதனூடாக இதில் ஏதாவது திருத்தங்கள் செய்வதனை நாம் விரும்பவில்லை. அதனாலேயே திருத்தங்கள் செய்வதனை நாம் எதிர்க்கின்றோம்.  அத்தோடு இது தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு கடிதங்களையும் அனுப்பி வைப்போம். அதே வேளையில் இதனைப் பலவீனமாக்கும் செய்றபாட்டையும் அரசிற்கு சார்பான திருத்தங்களை மேற்கொள்வதையும் நாங்கள் ஏ;றுக் கொள்ளப் போவதில்லை.

எனவே ஏற்கனவே முன்மொழியப்பட்டதை பலரும் ஆதரித்து வரவேற்றுள்ளனர். அவ்வாறு வரவேற்ற நல்லெண்ணத்தை அல்லது எதிர்பார்ப்பை எந்த வகையில் சீர்குலைய விடாது அது முக்கியமானதாக அமைய வேண்டும். அதற்காக சர்வதேச உதவியடன் சிற்ந்த முறையில் வருவதற்காக நாமும் பல தரப்பினர்களுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இதற்காக niனிவாவிற்குச் செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments