Latest News

September 25, 2015

பாம்புத் தோல் போன்று காட்சியளிக்கும் புளூட்டோவின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது!
by Unknown - 0

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது.

சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நாசாவால் நியூ கரிசான்ஸ் விண்கலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பட்டது.

அதை மேரிலேண்டில் உள்ள லோரல் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் வடிவமைத்து அனுப்பினர்.

அந்த விண்கலம் தற்போது புளூட்டோவில் இருந்து 12.6 மைல் தொலைவில் இருந்தபடி நியூ கரிசான்ஸ் விண்கலத்தில் உள்ள லோர்ரி என்ற அதி நவீன டெலஸ்கோப் மூலம் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

புளூட்டோ கிரகத்தின் புதிய படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது, இதில் புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பு பாம்புத் தோல் போல காட்சியளிக்கிறது.

இதுவரை பார்த்திராத வகையில் இந்த படத்தில் புளூட்டோவின் மேற்பரப்பு காணப்படுகிறது. மேற்பரப்பு மிகவும் வித்தியாசமாக, பாம்பின் தோல் போலவே காணப்படுவது விஞ்ஞானிகளிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் புளூட்டோ கிரகத்தின் 530 கிலோமீட்டர் பரப்பளவு காணப்படுகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இது காணப்படுகிறது.

இதில் பாம்பு தோல் போல் உள்ள மலைகளும் காண்ப்படுகிறது என்று நியூ ஹாரிஸான்ஸ் குழுவின் துணைத் தலைவரான வில்லியம் மெக்கின்னோன் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் பல்வேறு வண்ணங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் இதைப் பார்த்தால் மரப் பட்டை போல காட்சி தருகிறது. பெரிய பாம்பின் தோல் போலவும் இது காணப்படுகிறது.

ஆங்காங்கே ஐஸ் திட்டுக்கள் குவிந்திருப்பதால் இப்படிப்பட்ட தோற்றம் தெரிவதாக கருதுகிறோம் என்றார் அவர். புளூட்டோவை அருகில் நெருங்கிக் கடந்தபோது நியூ ஹாரிஸன்ஸ் எடுத்த இன்னும் விரிவான, உண்மையான நிறத்துடன் கூடிய படங்கள் நமக்கு வரவில்லை. அவை வரும்போது மேலும் பல புதிய தகவல்களை நாம் பெற்றுகொள்ள முடியும் என்று கூறினார் வில்லியம்.
« PREV
NEXT »

No comments