சர்வதேசக் கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளாட்டர் மீது குற்றவியல் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஃபிஃபாவின் நிர்வாகத்தை அவர் மேலாண்மை செய்ததில் கிரிமினல் குற்றமிழைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் அவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான மிஷேல் பிளாட்டினிக்கு அவர் நேர்மையற்ற வகையில் இரண்டு மில்லியன் டாலர்களை வழங்கினார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுக்காக அவர் விசாரிக்கப்படுகிறார் எனக் கூறிப்பட்டுள்ளது.
அவர் ஜூரிச் நகரில் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தவிருந்த நிலையில், காவல்துறையினரின் விசாரணை நடைபெற்றதால், செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
தான் எந்தத் தவறும் செய்யவில்லையென ப்ளாட்டர் மறுத்துள்ளதாகவும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்துவருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment