எங்கள் அப்பாவை கட்டியணைக்க ஆசையாகவுள்ளது, ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள்’ என்ற கோஷத்துடன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தினர்.
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகவிருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி முதலமைச்சர் அலுவலகம் சென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்தப் பேரணியை வாழ்வின் ஒளியைத் தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
No comments
Post a Comment