Latest News

September 30, 2015

நீதி கேட்டு மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்!
by admin - 0

எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.
எமது அன்புக்குரிய சுவிஸ் வாழ் உறவுகளே…!
புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் காலத்தையும் அவசியத்தையும் உணர்ந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
30.09.2015; புதன்கிழமை பிற்பகல் 14:30 – 17:00 மணி
UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
« PREV
NEXT »

No comments