Latest News

September 12, 2015

ஐரோப்­பிய நாடு­களை நோக்கி வரும் குடி­யேற்­ற­வா­சி­களை தடுப்­ப­தற்கு இரா­ணு­வத்தை ஈடு­ப­டுத்­தி­யுள்ள ஹங்­கேரி
by admin - 0

ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்­கி­லி­ருந்து ஐரோப்­பிய நாடு­களை நோக்கித் தொடர்ந்து படை­யெ­டுத்து வரும் அக­தி­களை தடுக்க ஹங்­கேரி தனது எல்லைப் பிராந்­தி­யத்தில் இரா­ணு­வத்தை பணியில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­ச­மயம் டென்மார்க் குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிப்­பதைத் தடுக்க தனது நெடுஞ்­சா­லை­யொன்றை மூடி­யுள்­ளது.

அக­தி­களை ஐரோப்­பிய நாடு­க­ளி­டையே ஒதுக்­கீட்டு முறை­மையின் கீழ் பகிர்­வது தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் விவா­தித்து வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சேர்­பி­யா­வு­ட­னான ஹங்­கேரி எல்­லை­யி­னூ­டாக அள­வுக்­க­தி­க­மான அக­திகள் வரலாம் என அஞ்­சப்­ப­டு­கின்ற நிலையில், அந்த எல்லைப் பிராந்­தி­யத்­தி­லான காவலை அதி­க­ரிக்கும் முக­மாக பெரு­ம­ளவு இரா­ணு­வத்தை அந்தப் பிராந்­தி­யத்தில் நிலை­நி­றுத்த ஹங்­கேரி நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

அக­திகள் உட்­பி­ர­வே­சிப்­பதைத் தவிர்க்க அந்­நாடு வேலி­யொன்றை அமைத்­துள்ள போதும் அந்த வேலியைத் தாண்டி பெருந்­தொ­கை­யான அக­திகள் அந்­நாட்­டிற்குள் உட்­பி­ர­வே­சித்து வரு­கின்­றனர்.

அதே­ச­மயம் அக­தி­களின் உட்­பி­ர­வே­சத்தைத் தடுக்க நெடுங்­சா­லை­யொன்றை டென்மார்க் மூடி­யுள்­ளது. இந்நிலையில் அந்­நாட்டுப் பொலிஸார் தெரி­விக்­கையில், தமது நாட்டில் புக­லிடம் கோர எதிர்­பார்க்­காத குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு, அவர்கள் சுவீ­ட­னுக்கு செல்­வ­தற்கு வச­தி­யாக பதிவு செய்­யாமல் தமது நாட்­டி­னூ­டாக சுதந்­தி­ர­மாகப் பய­ணிக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளனர்.

அத்­துடன் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு வர­வேற்­ப­ளித்­துள்ள ஐரோப்­பிய நாடான ஜேர்­ம­னிக்­கான புகை­யி­ரத சேவை­களை டென்மார்க் வியா­ழக்­கி­ழமை பகு­தி­யாக மீள ஆரம்­பித்து வைத்­தி­ருந்­தது.

“நாங்கள் எமது நாட்டில் புகலிடம் கோராத வெளிநாட்டவர்களை தொடர்ந்து இங்கு வைத்திருக்க முடியாது" என டென்மார்க் தேசிய பொலிஸ் தலைவர் ஜென்ஸ் ஹென்றிக் ஹொஜ்ப்ஜேர்க் தெரிவித்தார்.

அதேசமயம் ஹங்­கே­ரிக்கு செல்லும் வழியில் தாம் கிரேக்கப் பொலி­ஸாரால் அடித்து உதைக்­கப்­பட்­ட­தாக அக­திகள் சிலர் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments