Latest News

September 11, 2015

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்
by admin - 0

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத் தச் சட்­ட­த்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்­கான சிவில் பிர­தி­நி­தி­க­ளாக கலா­நிதி ஏ.டீ. ஆரி­ய­ரத்ன, கலா­நிதி ராதிகா குமா­ர­சு­வாமி
மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஷிப்லி
அஸீஸ் ஆகியோர் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளனர்.
அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஏற்­க­னவே ஏழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது மூன்று சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளனர்.
இந்­நி­லையில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளுக்கு எதிர்­வரும் 22 ஆம் திகதி கூட­வுள்ள
பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஏழு மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது கூட்டம் நேற்று சபா­நா­யகர் இல்­லத்தில் நடை­பெற்­றது.
அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மற்றும் உறுப்­பி­னர்­க­ளான பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் சம்­பிக்க ரண­வக்க விஜே­தாச ராஜ­பக்ஷ எம்.ஏ. சுமந்­திரன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகி­யோரே நேற்­றைய தினம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.
குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள மூன்று சிவில் சமூக பிர­தி­நி­திகள் தொடர்­பா­கவே இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. பிர­ப­ல­மான சிவில் சமூக பிர­தி­நி­தி­களின் பெயர்கள் இந்த சந்­திப்­பின்­போது முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.
இதன்­போதே அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்­கான சிவில் பிர­தி­நி­தி­க­ளாக கலா­நிதி ஏ.டீ. ஆரி­ய­ரத்ன, கலா­நிதி ராதிகா குமா­ர­சு­வாமி மற்றும் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஷிப்லி அஸீஸ் ஆகி­யோரை முன்­மொ­ழி­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது விரை­வாக அர­சி­ய­ல­மைப்பு பே ரவையை நிறுவி சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ர­வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் உத்­தி­யோ­க­பூர்வ அடுத்த கூட்டம் எதிர்­வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது.
அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஜனா­தி­பதி தனது பிர­தி­நி­தி­யாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் நகர அபி­வி­ருதி மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்­கவை நிய­மித்­துள்ளார்.
ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷவை தனது பிர­தி­நி­தி­யாக அர­ச­ய­ல­மைப்பு பேர­வைக்கு நிய­மித்­துள்ளார்.
பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­மந்தன் ஆகியோர் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளனர். எதிர்க்­கட்சித் தலைவர் தனது பிர­தி­நி­தி­யாக எம்.ஏ. சுமந்­தி­ரனை நிய­மித்­துள்ளார். சிறிய கட்­சி­களின் சார்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித்த ஹேரத் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
அந்­த­வ­கையில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்­கான ஏழு மக்கள் பிர­தி­நி­திகள் நிய­மிக்­கப்­பட்­டு­விட்­டனர். இந்­நி­லையில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு மேலும் மூன்று சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் மொத்த 10 உறுப்­பி­னர்கள் இடம்­பெ­று­வார்கள். அவர்­களில் 7 மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் உள்­ள­டங்­கு­வார்கள்.

இந­நி­லை­யி­லேயே மக்கள் பிர­தி­நி­தி­க­ளான ஏழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நேற்­றைய தினம் கூடி சிவில் சமூக பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வது தொடர்பில் விரி­வாக ஆராய்ந்­துள்­ளனர். இதன் பின்னர் மூன்று சிவில் சமூக பிர­தி­நி­திகள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளனர்.

அர­சி­ய­ல­மைப்பு பேரவை நிறு­வப்­பட்ட பின்னர் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் கீழ் வரு­கின்ற சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு தலை­வர்­களும் ஆணை­யா­ளர்­களும் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். பொதுச் சேவை ஆணைக்­குழு பொலிஸ் ஆணைக்­குழு கணக்­காய்வு ஆணைக்­குழு மனித உரிமை ஆணைக்­குழு இலஞ்ச ஊழல் ஒழிப்பு நிதி எல்லை நிர்­ணய மற்றும் தேசிய பெறுகை ஆணைக்­குழு என்­ப­ன­வற்­றுக்கு ஆணை­யா­ளர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யினால் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

ராதிகா குமா­ர­சு­வாமி

டாக்டர் ராதிகா குமா­ர­சு­வாமி ஐக்­கிய நாடுகள் சபையின் பிரதி செய­லாளர் நாய­க­மாக செயற்­பட்­டவர். ஆயுத மோதல்­களும் சிறு­வர்­களும் தொடர்­பான விசேட பிர­தி­நி­தி­யா­கவும் செயற்­பட்­டவர். 1953 ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ராதிகா குமா­ர­சு­வாமி சட்­டத்­த­ரணி என்­ப­துடன் இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­விலும் பதவி வகித்தார். ஐக்­கிய நாடுகள் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக விசேட அறிக்­கை­யா­ள­ரா­கவும் ராதிகா குமா­ர­சு­வாமி 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை­யான காலப்பகுதியில் செயற்பட்டுள்ளார்.

கலாநிதி ஆரியரட்ன

சர்வோதய அமைப்பின் தலைவரான ஆரியரட்ன சிறந்த சமூக தலைவராக பார்க்கப்படுகின்றார். 83 வயதான ஆரியரட்ன சர்வோத அமைப்பின் ஸ்தாபகராவார். 1996 ஆம் ஆண்டு இந்தியாவின் காந்தி சமாதான விருதை வென்றவர்.

சிப்லி அஸிஸ்

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிப்லி அஸிஸ் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கையின் சட்டத்துறைக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளார். 1995 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை சிப்லி அஸிஸ் இலங்கையின் சட்டமா அதிபராக கடமையாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.
« PREV
NEXT »

No comments